Punjab Kings: ஒரே பெயரில் 2 வீரர்களால் குழப்பம்.. ஏலத்தில் வேறொரு வீரரை மாற்றி எடுத்த பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 2024 ஏலத்தில் அவரை வாங்கிய பிறகு ஏலத்தை ரத்து செய்ய விரும்புவதாகத் தோன்றியதற்கு பிபிகேஎஸ் விளக்கம் அளித்த பிறகு ஷஷாங்க் சிங் பதிலளித்தார்.
பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் 2023 ஏலத்தில் ஷஷாங் சிங் என்ற வீரரை வாங்கியது. ஆனால், சில நிமிடங்கள் கழித்து இதே பெயரில் இருக்கக் கூடிய வேறொரு வீரரை எடுக்கவே விரும்பினோம், இந்த ஷஷாங் சிங்கை அல்ல என்று ஏலம் விடுபவரிடம் கோரியது. ஆனால், ஏலம் விடுபவர் ஏலம் முடிந்தது விதிமுறைப்படி நீங்கள் எடுத்த வீரரை மட்டுமே அணியில் சேர்க்க முடியும் என்று கூறினார்.
பின்னர் அதை அணி நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. அத்துடன், ஷஷாங் சிங், எங்கள் அணியின் வெற்றிக்கு பாடுபடுவார் என நம்புகிறோம் என்று கூறியது.
அதற்கு பதிலளித்த ஷஷாங் சிங், “நிச்சயமாக, என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி” என்று கூறினார்.
ஷஷாங்க் தனது அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்திற்கு வாங்கப்பட்டார்.
சத்தீஸ்கரைச் சேர்ந்த 32 வயதான இவர் சீனியர் வீரர் ஆவார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக முன்பு விளையாடியிருக்கிறார். மற்றொரு 19 வயதான வங்காளத்தைச் சேர்ந்த ஷஷாங் சிங் உள்ளார், அவர் முதல் தர கிரிக்கெட்டில் கூட விளையாடியதில்லை. ஆனால், பெங்காலைச் சேர்ந்த அவரை தங்கள் அணிக்கு வாங்க பஞ்சாப் கிங்ஸ் அணி முயற்சி செய்தது.
ஷஷாங்க் 55 டி20களில் 724 ரன்களை 20.11 சராசரியிலும், 135க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஐந்து அரைசதங்களை விளாசியிருக்கிறார். 15 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அவர் 30 போட்டிகளில் 41.08 சராசரியில் 986 ரன்கள் எடுத்தார், 27 இன்னிங்ஸ்களில் இரண்டு சதம் மற்றும் மூன்று அரைசதங்கள் மற்றும் 33 விக்கெட்டுகளை வீழ்த்தி லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டிலும் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளார்.
பஞ்சாப் அணி, இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் (ரூ. 4.2 கோடி), தென்னாப்பிரிக்க வீரர் ரிலீ ரோசோவ் (ரூ.8 கோடி) மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் (ரூ. 11.75 கோடி) ஆகியோரை ஏலத்தில் வாங்கினர்.