PBKS vs RCB Preview: வெற்றி நடையைத் தொடரும் முனைப்பில் பஞ்சாப்.. சொந்த மண்ணில் கெத்து காட்ட காத்திருக்கும் ஆர்சிபி-royal challengers bengaluru vs punjab kings 6th match indian premier leauge - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Pbks Vs Rcb Preview: வெற்றி நடையைத் தொடரும் முனைப்பில் பஞ்சாப்.. சொந்த மண்ணில் கெத்து காட்ட காத்திருக்கும் ஆர்சிபி

PBKS vs RCB Preview: வெற்றி நடையைத் தொடரும் முனைப்பில் பஞ்சாப்.. சொந்த மண்ணில் கெத்து காட்ட காத்திருக்கும் ஆர்சிபி

Manigandan K T HT Tamil
Mar 25, 2024 06:07 AM IST

PBKS vs RCB Preview: ஆர்சிபி-பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் 31 ஆட்டங்களில் விளையாடி 14ல் பெங்களூருவும், 17 ஆட்டங்களில் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு மொஹாலியில் நடந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றது. 2022ல் நடந்த இரண்டு ஆட்டங்களிலும் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது.

ஆர்சிபி கேப்டன் பிளெசிஸ்-பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவன்
ஆர்சிபி கேப்டன் பிளெசிஸ்-பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவன் (HT)

ஐபிஎல் 2024 இன் 6வது போட்டியில் பெங்களூருவில் திங்கள்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த சீசனில் இரு அணிகளுக்கும் இது இரண்டாவது ஆட்டமாகும்.

ஆர்சிபிக்கு ஃபஃப் டு பிளெசிஸ் தலைமையிலும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவான் தலைமையிலும் களம் காண்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தோல்வியில் இருந்து மீண்டு வர ஆர்சிபி முனைப்பு காட்டும். அதேநேரம், பஞ்சாப் கிங்ஸ் டெல்லிக்கு எதிரான வெற்றியுடன் தங்களது பயணத்தை தொடங்கும்.

பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஷிகர் தவானின் பஞ்சாப் கிங்ஸ் ஆர்சிபிக்கு எதிரான கடைசி ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு பெங்களூருவில் நடந்த முந்தைய ஆட்டத்தில் ஆர்சிபி வென்றது. தவான் பஞ்சாப் கிங்ஸில் நல்ல வீரர்களைப் பெற்றுள்ளார், ஒவ்வொருவரும் தங்கள் திறமைக்கு ஏற்றவாறு விளையாடினால், அவர்கள் தங்கள் சொந்த மைதானத்தில் ஆர்சிபியை சிறப்பாக எதிர்கொள்ள முடியும்.

இரு அணிகளுமே ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. பெங்களூரு மூன்று முறை இறுதிப் போட்டிக்கு வந்திருந்தாலும், பஞ்சாபின் ஒரே ஐபிஎல் பைனல் 2014 இல் இருந்தது. அதன்பிறகு, பஞ்சாப் கிங்ஸ் தொடர்ந்து ஆறாவது அல்லது அதற்குக் கீழே புள்ளிப் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது.

நேருக்கு நேர்

இரு அணிகளும் 31 ஆட்டங்களில் விளையாடி 14ல் பெங்களூருவும், 17 ஆட்டங்களில் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு மொஹாலியில் நடந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றது. 2022ல் நடந்த இரண்டு ஆட்டங்களிலும் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது.

RCB vs PBKS இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் அதிகபட்சமாக PBKS அடித்த 232 ரன்களும், RCB அடித்த 84 ரன்களும் பதிவு செய்துள்ளன. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணிக்காக கிறிஸ் கெய்ல் மற்றும் விராட் கோலி ஆகியோர் சதம் அடித்துள்ளனர். ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடம் கில்கிறிஸ்ட், டேவிட் மில்லர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான பெரும்பாலான ஆட்டங்களில் பொதுவான மைதானங்களில் வென்றுள்ளது. மறுபுறம், ஆர்சிபி அணியானது பெங்களூரு மற்றும் மொஹாலியில் அதிக போட்டிகளில் வென்றுள்ளது.

ஆர்சிபிக்கு அதிக ரன்கள் - விராட் கோலி - 861

ஆர்சிபிக்கு அதிக விக்கெட்டுகள் - யுஸ்வேந்திர சாஹல்- 25

பஞ்சாப் கிங்ஸுக்கு அதிக ரன்கள்- கிறிஸ் கெய்ல்- 873 (பிபிகேஎஸ் மற்றும் ஆர்சிபிக்கு ஒன்றாக எடுக்கப்பட்டது)

பஞ்சாப் கிங்ஸுக்காக சந்தீப் சர்மா-17 விக்கெட்டுகள்

இரு அணிகளுக்கும் இடையேயான நேருக்கு நேர் போட்டிக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இந்தப் போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளதால், அதிக ரன்கள் அடிக்கும் போட்டியை எதிர்பார்க்கலாம். இந்தப் போட்டியில் ஆர்சிபி தோல்வியடைந்தால், அந்த அணிக்கு அது இரண்டாவது தோல்வியாக அமையும். ஒருவேளை ஆர்சிபி ஜெயித்தால், பஞ்சாப் கிங்ஸுக்கு முதல் தோல்வியாக அமையும்.

என்ன நடக்கப் போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தப் போட்டியை ஜியோ சினிமா செயலியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.