CSK vs PBKS: கடைசி பந்தில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி, சொந்த மண்ணில் சிஎஸ்கேவுக்கு 2வது தோல்வி
Punjab Kings: 20 ஓவர்களில் 201 ரன்களை விரட்டி பஞ்சாப் கிங்ஸ் ஜெயித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே 41வது லீக் ஆட்டம் சென்னையில் இன்று (ஏப்.30) இன்று நடந்தது.
இந்த ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்தது.
120 பந்துகளில் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி சேஸிங் செய்தது. அந்த அணி பரபரப்பான கடைசி ஓவரின் கடைசி பந்தில் இலக்கை அடைந்து த்ரிலிங் வெற்றி பெற்றது.
தொடக்க வீரர்களாக களம் புகுந்த பிரப்சிம்ரன் சிங், தவன் ஆகியோர் களம் இறங்கினர்.
தவன் 5வது ஓவரில் துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் மதீஷாவிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். 15 பந்துகளில் 28 ரன்களை தவன் விளாசினார்.
பின்னர் அதர்வா களம் புகுந்தார். இருவரும் அதிரடி காண்பிக்கத் தொடங்கினர். அரை சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரப்சிம்ரன் சிங் 24 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்தபோது ஜடேஜா வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்றார். ஆனால், பந்து பேட்டில் படாமல் நேராக தோனியின் கைகளில் சிக்கியது.
இதையடுத்து, அவர் ஸ்டம்பிங் செய்தார். அவரைத் தொடர்ந்து வந்த லியாம் லிவிங்ஸ்டோன் 24 பந்துகளில் 40 ரன்களை சரவெடியாய் அடித்தார்.
சாம் கர்ரன் 29 ரன்களிலும், ஜிதேஷ் சர்மா 21 ரன்களிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி ஓவரை பதிரானா வீசினார். கடைசி ஓவரில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. சிகந்தர் ராஸா பவுண்டரி எல்லைக்கு பந்தை விரட்டி, 3 ரன்கள் ஓடினார்.
அணியும் இலக்கை அடைந்து வெற்றி கண்டது. சிஎஸ்கே சார்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பதிரானா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
முன்னதாக, சிஎஸ்கே பேட்டிங் செய்தபோது ஓபனிங் பேட்ஸ்மேன்களாக டெவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களம்புகுந்தனர்.
கான்வே அரை சதம்
இருவரும் தொடக்கம் முதலே விளாசத் தொடங்கினர். டெவன் கான்வே 30 பந்துகளில் அரை சதம் விளாசி அசத்தினார்.
இது இந்த சீசனில் அவருக்கு 5வது அரை சதம் ஆகும். கடந்த 6 இன்னிங்ஸ்களில் 5 அரை சதங்களை அவர் விளாசினார்.
மறுபக்கம் அதிரடி வீரர் ஷிவம் துபே 17 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 1 ஃபோர் உள்பட 28 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த மொயின் அலி 10 ரன்கள் எடுத்திருந்போது ராகுல் சஹர் வீசிய பந்தை தூக்கி அடிக்க கிரீஸை விட்டு முன்னேறி வந்தார்.
எனினும், பந்து பேட்டில் சிக்காத காரணத்தால் விக்கெட் கீப்பர் ஸ்டம்பிங் செய்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்