IPL 2024: ராஜஸ்தான் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள், தக்கவைக்கப்பட்ட வீரர்கள் லிஸ்ட்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ipl 2024: ராஜஸ்தான் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள், தக்கவைக்கப்பட்ட வீரர்கள் லிஸ்ட்

IPL 2024: ராஜஸ்தான் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள், தக்கவைக்கப்பட்ட வீரர்கள் லிஸ்ட்

Manigandan K T HT Tamil
Nov 26, 2023 05:47 PM IST

கடந்த சீசனில் ராயல்ஸ் ஏழு வெற்றிகள் மற்றும் ஏழு தோல்விகளுடன் ஐந்தாவது இடத்தில் முடிந்தது. அவர்கள் பிளேஆஃப் இடத்தைப் பிடிக்கத் தவறிவிட்டனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் (@rajasthanroyals)

அப்துல் பாசித், ஆகாஷ் வஷிஷ்ட், குல்தீப் யாதவ், எம் அஷ்வின், கே.சி கரியப்பா மற்றும் கே.எம் ஆசிஃப் ஆகியோரையும் அந்த அணி விடுவித்தது.

தக்கவைக்கப்பட்ட வீரர்களில் இந்திய நட்சத்திரங்கள் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா, இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் ஆகியோர் அடங்குவர்.

கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஏழு வெற்றிகள் மற்றும் ஏழு தோல்விகளுடன் ஐந்தாவது இடத்தில் முடிந்தது. அவர்கள் பிளேஆஃப் இடத்தைப் பிடிக்கத் தவறிவிட்டனர்.

வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கானுக்கு ஈடாக RR அவர்களின் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கலை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு (LSG) டிரேட் செய்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் Director of Cricket, குமார் சங்கக்காரா, சில வீரர்களை தக்கவைத்ததன் பின்னணியில் இருக்கும் உத்திகள் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் அணியின் அறிக்கையில், "இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாங்கள் ஏமாற்றமளிக்கும் சீசனில் இருந்தோம், அங்கு நாங்கள் உண்மையிலேயே சிறப்பாக செயல்படவில்லை . எங்களிடம் உள்ள அணி மீண்டும் பட்டத்துக்காக போட்டியிடும் முயற்சியில் மீண்டும் முன்னேறும் திறன் கொண்டது. அணிக்காக போட்டிகளை வெல்லும் திறன் இருப்பதாக நாங்கள் நம்பும் வலுவான வீரர்களை தக்கவைத்துக்கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதிக செயல்திறன் கொண்ட அணியாக, எங்கள் பல்வேறு அம்சங்களைச் செம்மைப்படுத்துவதே குறிக்கோள்.

மறுபுறம், ஒவ்வொரு ஆண்டும், அணிக்காக மகத்தான பங்களிப்பைச் செய்த சில வீரர்களை விட்டுவிட வேண்டிய கடினமான நேரம் இது. அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறோம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர்கள் ஆற்றிய பங்களிப்புக்கும், மேலும் எதிர்வரும் அவர்களின் கிரிக்கெட் பயணத்திற்கும் அவர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன்" என்று சங்ககாரா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸில் விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஜோ ரூட், அப்துல் பாசித், ஜேசன் ஹோல்டர், ஆகாஷ் வசிஷ்ட், குல்தீப் யாதவ், ஓபேட் மெக்காய், எம் அஷ்வின், கே.சி கரியப்பா, கே.எம்.ஆசிப்

டிரேட் செய்யப்பட்ட வீரர்: தேவ்தத் படிக்கல்

டிரேடில் எடுத்த வீரர்: அவேஷ் கான்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், டொனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், ஆர் அஷ்வின், குல்தீப் சென், நவ்தீப் சைனி, சந்தீப் சர்மா, டிரென்ட் போல்ட், யுவேந்திர சாஹல், ஆடம் கிருஷ்ணா, பிரசித் ஜம்பா .

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.