Rohit Sharma avoids Hardik hug: குஜராத் உடனான போட்டி முடிந்த பிறகு ஹர்திக் பாண்டியாவை தவிர்த்தாரா ரோஹித் சர்மா?
Rohit Sharma: நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், ஞாயிற்றுக்கிழமை மும்பைக்கு எதிரான த்ரில்லர் போட்டியை வெல்ல அந்த அணி தவறவிட்டது. ஐபிஎல் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி எப்போது தோல்வியைத் தான் பெரும்பாலும் சந்தித்திருக்கிறது.

மும்பை இந்தியன் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியாவை தவிர்த்துவிட்டு ஏதோ உரையாடியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதன் பின்னணியில் என்ன நடந்தது என பார்ப்போம்.
மும்பை இந்தியன்ஸ் தனது ஐபிஎல் வரலாற்றில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் நிலையில் இருந்தது. கடைசி 36 பந்துகளில் சேஸிங் செய்ய 48 ரன்கள் தேவை மற்றும் கைகளில் ஏழு விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், மும்பை 2012 க்குப் பிறகு ஐபிஎல் ஆட்டத்தின் தொடக்க ஆட்டத்தில் முதல் வெற்றியின் விளிம்பில் இருந்தது. 2022 முதல் அகமதாபாத்தில் நடந்த அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் சொந்த மண்ணில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் வெற்றியாக இது இருந்து இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், ஞாயிற்றுக்கிழமை மும்பைக்கு எதிரான த்ரில்லர் போட்டியை வெல்ல அந்த அணி தவறவிட்டது. ஐபிஎல் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி எப்போது தோல்வியைத் தான் பெரும்பாலும் சந்தித்திருக்கிறது. ஆனால், பின்னர் மீண்டு வந்து பதிலடி கொடுப்பதுடன் புள்ளிப் பட்டியலில் டாப் 3 இடங்களுக்கும் முன்னேறியிருக்கிறது.
சூழ்நிலை இப்படி இருக்க குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸுக்கு சென்ற ஹர்திக் பாண்டியாவை மைதானத்தில் திரண்டிருந்த குஜராத் ரசிகர்கள் கேலி செய்தனர். இதற்கு எதிர்வினைகளும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
