அனைத்து பவுலர்களும் விக்கெட் மழை..ஆல்ரவுண்டராக ஜொலித்த நிதிஷ் குமார் ரெட்டி! பெரிய வெற்றியுடன் தொடரை வென்ற இந்தியா
இந்திய அணியில் பவுலிங் செய்த அனைத்து பவுலர்களும் விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கிலும், இரண்டாவது இன்னிங்ஸில் பவுலிங்கிலும் கலக்கிய நிதிஷ் குமார் ரெட்டி ஆல்ரவுண்டராக ஜொலித்தார். பெரிய ஸ்கோர் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வங்கதேசத்துக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.

அனைத்து பவுலர்களும் விக்கெட் மழை..ஆல்ரவுண்டராக ஜொலித்த நிதிஷ் குமார் ரெட்டி! பெரிய வெற்றியுடன் தொடரை வென்ற இந்தியா (AP)
இந்திய சுற்றுப்பயணம் வந்திருக்கும் வங்கதேசம், டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.
இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில், குவாலியரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கியது. வங்கதேச அணியில் ஷோரிபுல் இஸ்லாம்க்கு பதிலாக தன்சிம் ஹசான் ஷாகிப் சேர்க்கப்பட்டார்.
