Jasprit Bumrah: பாண்டியா வருகைக்கு பின் மும்பை இந்தியன்ஸ் அணியில் நிலவிய சர்ச்சை..மனம் திறந்து பேசிய பும்ரா
பாண்டியா வருகைக்கு பின் மும்பை இந்தியன்ஸ் அணியில் நிலவிய சர்ச்சை, சலசலப்பு, ரசிகர்களின் விமர்சனங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் பும்ரா. சக வீரராக பாண்டியாவுக்கு அணியாக ஆதரவு அளித்தது பற்றியும் கூறியுள்ளார்.

பாண்டியா வருகைக்கு பின் மும்பை இந்தியன்ஸ் அணியில் நிலவிய சர்ச்சை குறித்து மனம் திறந்து பேசிய பும்ரா (PTI)
ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸில் ஒன்றாக விளையாடினர். மேலும் இருவரும் இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினர்.
கடந்த சில மாதங்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு சோதனை காலமாகவே அமைந்தது. பல்வேறு சர்ச்சை பேச்சுகள், விமர்சனங்கள் என அவரது வாழ்க்கை ரோலர்-கோஸ்டராக அமைந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பாண்டியா கம்பேக்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பினார். அப்போது அவர் பெரிதும் கொண்டாடப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியபோது இரண்டு ஐபிஎல் கோப்பைகளை வென்று அவர், விடுவிக்கப்பட்டார். பின்னர் மறுபடியும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கம்பேக் கொடுத்தார்.
