CSK vs MI Preview: சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனை எதிர்கொள்ள காத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ்!-கெத்து காட்டுமா சிஎஸ்கே
CSK vs MI Preview: வான்கடே மைதானத்தில் ஏப்ரல் 14-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று தற்போது 7-வது இடத்தில் உள்ளது. மறுபுறம், சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் 2 இல் தோல்வியடைந்து 3 வது இடத்தில் அமர்ந்துள்ளது.

இன்றைய ஐபிஎல் போட்டி: ஏப்ரல் 14 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன. இது இந்த சீசனில் 29வது லீக் மேட்ச் ஆகும். மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று தற்போது 7-வது இடத்தில் உள்ளது. மறுபுறம், சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் 2 இல் தோல்வியடைந்து 3 வது இடத்தில் அமர்ந்துள்ளது. இன்று நடக்கும் இரண்டாவது போட்டியான இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 3.30 மணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸும் கொல்கத்தாவில் மோதுகின்றன.
மும்பைக்கு எதிரான கடைசி 5 போட்டிகளில் சென்னை அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2022ல் சிஎஸ்கே அணிக்கு எதிராக மும்பை அணி வெற்றி பெற்றது. மும்பை வேகப்பந்து வீச்சாளர் டேனியல் சாம்ஸ் 4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.