MS Dhoni: கேப்டன்சியில் இருந்து விலகிய எம்எஸ் தோனி! நான்கு சீசன்கள், ஒரு முறை ஆரஞ்சு தொப்பி - புதிய கேப்டன் ஆன ருதுராஜ்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ms Dhoni: கேப்டன்சியில் இருந்து விலகிய எம்எஸ் தோனி! நான்கு சீசன்கள், ஒரு முறை ஆரஞ்சு தொப்பி - புதிய கேப்டன் ஆன ருதுராஜ்

MS Dhoni: கேப்டன்சியில் இருந்து விலகிய எம்எஸ் தோனி! நான்கு சீசன்கள், ஒரு முறை ஆரஞ்சு தொப்பி - புதிய கேப்டன் ஆன ருதுராஜ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 21, 2024 05:16 PM IST

ஐபிஎல் 2024 தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில், சிஎஸ்கே கேப்டன் பொறுப்பில் இருந்து எம்எஸ் தோனி விலகுவதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிஎஸ்கே அணிக்கான விளம்பர ஷுட்டிங்கில் தோனி - ருதுராஜ்
சிஎஸ்கே அணிக்கான விளம்பர ஷுட்டிங்கில் தோனி - ருதுராஜ்

இதையடுத்து அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்வாட் செயல்படுவார் என அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இதையடுத்து இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி மோதவுள்ளன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கிறது.

நாளை மாலை 6.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.  

முடிவுக்கு வந்த சகாப்தம்

கேப்டன்சியில் இருந்து தோனி விலகுவதாக வந்த அறிவிப்பை தொடர்ந்து ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் உணர்ச்சி பொங்க கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான கேப்டனாக இருந்து வந்த எம்எஸ் தோனி, இதுவரை 226 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 133 வெற்றி, 91 தோல்விகளை பெற்றுள்ளார். 2 போட்டிகள் முடிவு இல்லாமல் போயுள்ளது. இவரது வெற்றி சதவீதம் 59.38 ஆகும்.

ஐபிஎல் வரலாற்றிலேயே வெற்றிகரமான அணியாக இருக்கும் சிஎஸ்கே

ஐபிஎல் தொடங்கிய 2008 முதல் சிஎஸ்கே அணியை வழிநடத்தி வரும் தோனி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 10 முறை இறுதிப்போட்டி வரை அணியை அழைத்து சென்றுள்ளார். அத்துடன் மிக முக்கிய இதுவரை 16 சீசன்கள் நடந்த ஐபிஎல் தொடரில் 14 சீசன்கள் மட்டுமே விளையாடியிருக்கும் சிஎஸ்கே 5 முறை கோப்பையை வென்று மிக தனித்துவ சாதனையை புரிந்துள்ளது. இது எல்லாம் தோனியின் கேப்டன்சியில் தான் கிடைத்தது.

இரண்டாவது முறையாக கேப்டன்சியில் இருந்து விலகும் தோனி

ஏற்கனவே 2021 சீசனில் ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு 2022 சீசனில் மெகா ஏலத்தின் மூலம் இளம் வீரர்களை அணி புதிதாக உருவாக்கப்பட்டு 2022 சீசனில் களமிறங்கியபோது தனது கேப்டன்சியில் இருந்து விலகினார் தோனி. அப்போது அந்த சீசனில் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஆனால் அணி பெற்ற தொடர் தோல்வி காரணமாக அந்த சீசனின் பாதியிலேயே கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலக, தோனி மீண்டும் கேப்டன் ஆனார்.

இதைத்தொடர்ந்து 2023 சீசனில் மீண்டும் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றிருக்கும் நிலையில், தற்போது 2024 சீசனில் கேப்டன்சியில் இருந்து விலகியுள்ளார். இந்த முறை புதிய கேப்டனாக அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட்க்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதான் கடைசி ஐபிஎல்

கடந்த சீசனில் கோப்பை வென்ற பின்னர் உடல்நிலை ஒத்துழைத்தால் அடுத்த சீசனும் விளையாடுவேன் என்று தோனி தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் அவர் விளையாடுவது கடந்த சில மாதங்களுக்கு முன்னரே உறுதியானது. ஆனால் தோனி தற்போது கேப்டன்சியில் இருந்து விலகி இருப்பது, அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுத்து முடிவாக இருப்பதாக கூறப்படுகிறது.

அப்படியிருக்கும்பட்சத்தில் இதுதான் தனது கடைசி ஐபிஎல் தொடராக இருக்ககூடும் எனவும், அதில் சாதாரண வீரராக விளையாடிவிட்டு தோனி விடைக்கொடுக்கலாம் எனவும் தகவல்கள் உலா வருகின்றன. இருப்பினும் இதற்கான பதிலையும் தோனி சர்ப்ரைசாக வெளிப்படுத்தலாம்

இளம் பேட்ஸ்மேனாக கலக்கும் ருதுராஜ்

சிஎஸ்கே அணியில் 2020 சீசன் முதல் விளையாடி வருகிறார் ருதுராஜ் கெய்க்வாட். முதல் சீசனில் பெரிதாக திறமையை வெளிக்கட்டாத ருதுராஜ் உள்பட இளம் வீரர்களை ஸ்பார்க் இல்லை என தோனி சாடினார்.

இதைத்தொடர்ந்து 2021 சீசனில் ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் அந்த சீசனின் டாப் ஸ்கோரராக மாறி ஆரஞ்சி தொப்பியையும் வென்றார்.

தொடர்ந்து 2022, 2023 ஆகிய சீசனிகள் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருந்து வரும் ருதுராஜ் டாப் 10 பேட்ஸ்மேன்களின் ஒருவராக இருந்து வருகிறார். தற்போது அவர் கேப்டன் என்ற புதிய பொறுப்புடன் அணியில் களமிறங்க இருக்கிறார்.

Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.