Mohammed Shami: சானியா மிர்சா உடனான திருமண வதந்தி! கொஞ்சமாவது சிந்தியுங்கள் - மெளனம் கலைத்த முகமது ஷமி
சானிய மிர்சா உடனான திருமண வதந்தி குறித்து மெளனம் கலைத்த முகமது ஷமி, ஒருவரது வாழ்க்கை பற்றிய விவகாரத்தை பகிரும் முன் கொஞ்சமாவது சிந்தியுங்கள் என கூறியுள்ளார். ஒரே நேரத்தில் ரோஹித், கோலி ஓய்வு பெற்றது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, மற்றும் டென்னிஸ் வீராங்கனை சானிய மிர்சா ஆகியோர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் உலா வந்தன. முன்னாள் கணவரும், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் உடனான விவாகரத்து குறித்து சனியா மிர்சா தெரிவித்த பின்னர் முகமது ஷமியை அவர் திருமணம் செய்யப்போவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.
இந்த விவகாரம் தொடர்பாக அமைதி காத்து வந்த முகமது ஷமி, தற்போது முதல் முறையாக பேசியுள்ளார். பிரபல ஊடகவியலரான சுபங்கர் மிஸ்ராவின் யூடியூப் ஷோவான அன்ப்ளக்கில் பேசியுள்ளார்.
கோலி, ரவி சாஸ்த்ரியுடனான கருத்து மோதல், தன்னை பற்றி பரவும் வதந்தில் மற்றும் போலி செய்திகள் என பல்வேறு விஷயங்களை இந்த ஷோவில் பேசியுள்ளார் ஷமி.
கொஞ்சமாவது சிந்தியுங்கள்
வேடிக்கைக்காக வேண்டுமென்றே வதந்திகள், போலி செய்திகள் பரப்பபடுகிறது. ஆனால் என்ன செய்ய முடியும்? நான் போனை திறந்தால் அந்த மீம்ஸ்களை பார்க்க முடிந்தது. அவை வேடிக்கைக்காக உருவாக்கப்பட்டவை என்று மட்டுமே நான் கூற விரும்புகிறேன்.
இது போன்ற மீம்கள் ஒருவரது வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருந்தால், நீங்கள் அதைப் பற்றி சிந்தித்து பார்க்க வேண்டும். அதன் பின்னரே பகிர வேண்டும். இந்த நபர்கள் சரிபார்க்கப்படாத பக்கங்களில் இருந்து பகிர்கிறார்கள். அப்புறம் எதை வேண்டுமானலும் சொல்லி தப்பித்தும் கொள்கிறார்கள்.
ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். இவை அனைத்தையும் சரிபார்க்கப்பட்ட பக்கத்திலிருந்து சொல்ல உங்களுக்கு தைரியம் இருந்தால், நான் பதிலளிப்பேன்.
நீங்கள் எடுத்து கொண்ட காரியத்தில் வெற்றியை அடைய முயற்சி செய்யுங்கள், மக்களுக்கு உதவுங்கள் மற்றும் உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். இதையெல்லாம் செய்தால் நீங்கள் நல்ல மனிதர் என்பதை நான் நம்புகிறேன்" என்று கூறினார்.
முகமது ஷமி, சானியா மிர்சா புகைப்பட சர்ச்சை
கடந்த ஜூன் மாதம் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில், சானியா மற்றும் முகமது ஷமி ஆகியோர் இணைந்து நிற்பது போன்ற புகைப்படம் உலா வந்த நிலையில், சானியா இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக தகவல் தீயாய் பரவியது.
பின்னர் தான் இந்த புகைப்படம் சானியா - சோயிப் மாலிக் திருமணம் 2010ஆம் ஆண்டில் நடந்தபோது எடுத்த புகைப்படம் என்பதும், அதில் சோயிப் மாலிக் தலையை நீக்கிவிட்டு முகமது ஷமியின் படத்தை மார்பிங் செய்திருப்பது தெரியவந்தது.
இதுபற்றி சானியா மிர்சா எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில், முகமது ஷமியும் எதுவும் பேசாமல் இருந்தார். தற்போது முதல் முறையாக தனது கருத்தை இந்த வதந்தி குறித்து தெரிவித்துள்ளார்
ரோஹித், கோலி ஓய்வு அதிர்ச்சியளிக்கிறது
"டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வை அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் உறுதியான வீரர்களாகவும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளை-பந்து கிரிக்கெட்டின் ராஜாக்களாகவும் வலம் வந்துள்ளனர்.
ஒரே நேரத்தில் ஓய்வு அறிவித்தது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வீரர் வெளியேறும்போது, மற்றொருவர் உள்ளே நுழைவது இயற்கை சுழற்சியின் ஒரு பகுதியாகும். அத்தகைய சூழலை சந்திப்பது சவாலாக இருக்கும்" என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்