தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Sania Mirza Marriage: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை திருமணம் செய்கிறாரா? வதந்திக்கு சானியா மிர்சா தந்தை விளக்கம்

Sania Mirza Marriage: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை திருமணம் செய்கிறாரா? வதந்திக்கு சானியா மிர்சா தந்தை விளக்கம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 21, 2024 11:00 PM IST

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா திருமணம் செய்யவுள்ளார் என்ற வதந்தி பரவிய நிலையில் அதற்கு சானியா மிர்சா தந்தை விளக்கம் அளித்துள்ளார்.

Ace cricketer Mohammed Shami (left) and tennis leged Sania Mirza (right).
Ace cricketer Mohammed Shami (left) and tennis leged Sania Mirza (right).

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், முன்னாள் கணவருமான சோயிப் மாலிக்கிடம் இருந்து விவாகரத்து பெற்ற இந்தியா டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, இந்திய அணி கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஹாட்டான வதந்தி பரவுகிறது. வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, தனது மனைவி ஹசின் ஜகான் என்பவரை பிரிந்துள்ளார்.

சானியா தந்தை பதில்

இதையடுத்து இந்த வதந்தி குறித்து சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சா பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பாதவது, "இது தவறான செய்தி. சானியா, கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை சந்தித்து கூட கிடையாது" என்று கூறியுள்ளார்.

மார்பிங் புகைப்படத்தால் சர்ச்சை

கடந்த ஜூன் 12ஆம் தேதி சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில், சானியா மற்றும் முகமது ஷமி ஆகியோர் இணைந்து நிற்பது போன்ற புகைப்படம் உலா வந்த நிலையில், சானியா இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக தகவல் தீயாய் பரவியது.

பின்னர் தான் இந்த புகைப்படம் சானியா - சோயிப் மாலிக் திருமணம் 2010ஆம் ஆண்டில் நடந்தபோது எடுத்த புகைப்படம் என்பதும், அதில் சோயிப் மாலிக் தலையை நீக்கிவிட்டு முகமது ஷமியின் படத்தை மார்பிங் செய்திருப்பது தெரியவந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

காதலனை தேடுகிறேன்

இந்தியில் பிரபலமான தி கிரேட் இந்தியன் கபில் ஷோ என்ற நிகழ்ச்சியில் சானியா மிர்சா பங்கேற்றார். இதில் குத்துசண்டை வீராங்கனை மோரி கோம், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கபில் ஷர்மா, சானியாவிடம் உரையாடும்போது, உங்கள் வாழ்க்கையை மையப்படுத்தி படம் எடுத்தால் அதில் உங்களது காதலராக நடிக்க ஷாருக்கான் விருப்பம் தெரிவித்தார் என்றார்.

இதைக்கேட்டு சிரித்தவாறே பதில் சொன்ன சானியா, "நானே முதலில் காதலரை தேட வேண்டும். ஷாருக்கான் எனது காதலராக நடித்தால் கண்டிப்பாக அவருக்கு ஜோடியாக நடிப்பேன்" என்றார்

திருமண வதந்தி குறித்து இன்ஸ்டா பதிவு

ஜுன் மாதம் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டிருக்கும் சானியா தனது இன்ஸ்டா பதிவில் தனது திருமண வதந்தி குறித்து பதிவிட்டுள்ளார். அதில், "புனித ஹஜ் பயணத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்பில் நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன்.

இந்த மாற்றத்தக்க அனுபவத்துக்கு நான் தயாராகும் போது, ​​ஏதேனும் எனது தவறுகள் மற்றும் குறைபாடுகளுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மீட்பையும் ஆன்மீக புதுப்பிப்பையும் தேடும் இந்த வாய்ப்புக்காக என் இதயம் நன்றியுணர்வுடன் நிரம்பியுள்ளது.

அல்லாஹ் எனது பிரார்த்தனைகளை ஏற்று இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பாதையில் என்னை வழிநடத்த வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி மற்றும் மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன். நான் இந்த வாழ்நாள் பயணத்தைத் தொடங்கும்போது தயவுசெய்து உங்கள் எண்ணங்களிலும் பிரார்த்தனைகளிலும் என்னை வைத்துக் கொள்ளுங்கள். தாழ்மையான இதயத்துடனும் வலிமையான ஈமானுடனும் சிறந்த மனிதனாக மீண்டும் வருவேன் என்று நம்புகிறேன்" என்று உணர்வுபூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.

சானியா - சோயிப் மாலிக் விவாகரத்து

கடந்த 2010இல் சானியா - சோயிப் மாலிக் ஆகியோரின் திருமணம் ஹைதராபாத்தில் நடந்தது. இருவருக்கும் 2018இல் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு இஷான் மிர்சா மாலிக் என பெயர் வைத்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இதன் பின்னர் சானிய குடும்பத்தினர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "சானியா தனது தனிப்பட்ட வாழ்க்கையை எப்போதும் மக்கள் பார்வையில் இருந்து விலக்கி வைத்துள்ளார். ஆனால், இன்றைக்கு சோயிப்புடன் விவாகரத்து பெற்று சில மாதங்களே ஆனதை பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது.

ஷோயிப்பின் புதிய பயணத்துக்கு வாழ்த்துகள்! சானியாவின் வாழ்க்கையின் இந்த முக்கியமான காலகட்டத்தில், அனைத்து ரசிகர்களும் நலம் விரும்பிகளும் எந்தவிதமான ஊகங்களிலும் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். அவரது தனியுரிமைக்கு மதிப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்" என கூறப்பட்டிருந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.