புதிய மைல்கல்லை எட்டுவாரா குல்தீப் யாதவ்?

By Pandeeswari Gurusamy
Mar 05, 2024

Hindustan Times
Tamil

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் புதிய மைல்கல்லை எட்டும் முனைப்பில் உள்ளார்.

நடப்பு தொடரில், யாதவ் தான் விளையாடிய மூன்று டெஸ்டில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தர்மசாலா டெஸ்டில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் புதிய மைல்கல்லை எட்டுவார்.

இதன் மூலம் அவர் டெஸ்டில் 50 விக்கெட்டுகளை எட்டுவார்.

இதன் மூலம், மூன்று வடிவங்களிலும் குறைந்தது 50 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

11 டெஸ்டில் 46 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள குல்தீப், ஒருநாள் போட்டிகளில் 168 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 59 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

அஸ்வின், ஜடேஜா, பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய 3 வடிவங்களிலும் குறைந்தது 50 விக்கெட்டுகளை வீழ்த்திய மற்ற நான்கு இந்திய பந்துவீச்சாளர்கள்.

திருமணத்திற்குப் பின் பிரச்னை வராமல் இருக்க செய்ய வேண்டியவை?