தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Kkr Vs Rcb Result: கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள்..! ஹீரோயிசம் காட்டிய கரண் ஷர்மா - ஒரு ரன்னில் கொல்கத்தா த்ரில் வெற்றி

KKR vs RCB Result: கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள்..! ஹீரோயிசம் காட்டிய கரண் ஷர்மா - ஒரு ரன்னில் கொல்கத்தா த்ரில் வெற்றி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 21, 2024 07:53 PM IST

KKR vs RCB Result: மிட்செல் ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு ஹீரோயிசம் காட்டிய கரண் ஷர்மா, ஆர்சிபி அணியை வெற்றிக்கு மிக அருகில் அழைத்து சென்றார். இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றியை பெற்றது.

ஆர்சிபியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் த்ரில் வெற்றி
ஆர்சிபியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் த்ரில் வெற்றி

ட்ரெண்டிங் செய்திகள்

ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே பெங்களுருவில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே இந்த முறை கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் பழிதீர்க்க வேண்டும் என்ற முனைப்பில் ஆர்சிபி களமிறங்கயுது.

கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூ பிளெசிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 50, பில் சால்ட் 48, ஆண்ட்ரே ரசல் 27, ரமன்தீப் சிங் 24 ரன்கள் எடுத்தனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவுலிங்கில் யஷ் தயாள், கேமரூன் க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். லாக்கி பெர்குசன், முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

ஆர்சிபி சேஸிங்

இதையடுத்து 223 என்ற மிக பெரிய இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவரில் 221 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டாகியுள்ளது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது

அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 55, ராஜத் பட்டிதார் 52, தினேஷ் கார்த்திக் 25, சுயாஷ் பிரபுதேஷாய் 24 ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவரில் அதிரடி கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்திய கரண் ஷர்மா 20 ரன்கள் அடித்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவுலர்களில் ஆண்ட்ரே ரசல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சுனில் நரேன், ஹர்ஷித் ராணா, ஆண்ட்ரே ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். வருண் சக்கரவர்த்தி, மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

கோலி சர்ச்சைக்குரிய விக்கெட்

ஆர்சிபி அணியில் ஓபனராக களமிறங்கிய அணியின் கேப்டன் டூ பிளெசிஸ் 7 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். 18 ரன் எடுத்த கோலி, ஹர்ஷித் ராணா வீசிய ஃபுல்டாஸ் பந்தில் அவர் வசமே சிக்கினார். இதற்காக நோபால் அப்பீலும் கேட்டார். பந்து கோலியின் இடுப்புக்கு மேல் சென்றாலும் அவர் கிரீஸை விட்டு வெளியே நின்றதால் நோபால் கொடுக்கப்படவில்லை.

ஜேக்ஸ் - பட்டிதார் பார்ட்னர்ஷிப்

ஆரம்பத்திலேயே இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தவித்து வந்த ஆர்சிபி அணியை, வில் ஜேக்ஸ் - ராஜ்த் பட்டிதார் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டனர். இருவரும் தங்களது அரைசத்தை பூர்த்தி செய்தனர். வில் ஜேக்ஸ் 55, ராஜத் பட்டிதார் 52 ரன்கள் அடித்து அவுட்டானார்கள். இவர்கள் 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.

பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக் அதிரடி

கேமரூன் க்ரீன் 6 ரன்னில் வெளியேறினார். இவரை தொடர்ந்து இம்பேக்ட் வீரராக வந்த பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக் அதிரடியாக ரன்களை குவித்தனர். பிரபுதேசாய் 24, தினேஷ் கார்த்திக் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள்.

கரன் ஷர்மா ஹாட்ரிக் சிக்ஸர்

கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை என்று இருந்த போது மிட்செல் ஸ்டார்க் வீசினார். அந்த ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டார் கரன் ஷர்மா. 7 பந்தில் 20 ரன்கள் அடித்த அவர், ஆடத்தின் கடைசி ஓவரின் 5வது பந்தில் அவுட்டானார்.

எனவே கடைசி பந்தில் 3 ரன் தேவை என்று இருந்தபோது பேட் செய்த பெர்குசன் பந்தை டீப் பாயிண்ட் திசையில் அடித்து இரண்டாவது ரன் ஓட முயற்சித்தபோது அவுட்டானார். இதனால் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

.

IPL_Entry_Point