RCB vs KKR Live Score: கோலியின் Pure Class ஆட்டம்! விழிபிதுங்கிய கொல்கத்தா பவுலர்கள் - ஆர்சிபி ரன்குவிப்பு
விராட் கோலியின் கிளாஸ் பேட்டிங், மிடில் ஓவர்களில் க்ரீன், மேக்ஸ்வெல் அதிரடி, கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் சிறிய கேமியோ என முக்கிய வீரர்களின் பங்களிப்பால் ஆர்சிபி அணி சவலான இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 2024 தொடரின் 10வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிராக பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த சீசனில் ஆர்சிபி அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடிய ஒரு போட்டியில் வெற்றியை பெற்றுள்ளது.
ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கும் நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நிதிஷ் ராணாவுக்கு பதிலாக அனுகுல் ராய் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.
அதிகபட்சமாக விராட் கோலி 83 ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக கேமரூன் க்ரீன் 33, மேக்ஸ்வெல் 28 ரன்கள் எடுத்துள்ளனர். கடைசி கட்டத்தில் சிறிய கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக், 3 சிக்ஸர்களை பறக்க விட்டு 20 ரன்கள் எடுத்துள்ளார்.
கொல்கத்தா பவுலர்களில் ஹர்ஷித் ராணா, ஆண்ட்ரே ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். சுனில் நரேன் ஒரு விக்கெட்டை எடுத்தார். மிட்செல் ஸ்டார்க் இந்த போட்டியிலும் ரன்களை வாரி வழங்கினார். கடைசி ஓவரில் மட்டும் 16 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
டூ பிளெசிஸ் ஏமாற்றம்
சூழ்நிலைக்கு ஏற்ப பேட் செய்யக்கூடிய ஆர்சிபி கேப்டன் டூ பிளெசிஸ், ஹர்ஷித் ராணா வீசிய ஆட்டத்தின் 2வது ஓவரில் சிக்ஸரை பறக்கவிட்டார். ஆனால் அதற்கு அடுத்தபந்திலேயே எதிர்பாராத விதமாக அவுட்டானார். 8 ரன்னில் வெளியேறி அவர் ஏமாற்றம் அளித்தார்.
கோலி - க்ரீன் பார்ட்னர்ஷிப்
இரண்டாவது விக்கெட்டுக்கு கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த க்ரீன் கொஞ்சம் அதிரடி காட்டி ரன்குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் கோலியும் இணைந்து அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்கள் அடித்தார். இருவரும் சேர்ந்து 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். க்ரீன் 21 பந்தில் 33 ரன்கள், 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்து வெளியேறினார்
மேக்ஸ்வெல் அதிரடி
ஆல்ரவுண்டரான மேக்ஸ்வேல் விரைவாக ரன்குவிப்பதில் குறியாக இருந்தார். அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை அடித்த அவர், 19 பந்தில் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கோலி கிளாஸ் ஆட்டம்
ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி பொறுமையும், அதிரடியும் கலந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கோலி. அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து நொறுக்கியும், பின்னர் தனது பாணியில் டபுள்ஸ்களாக ஓடியும் ரன்களை அடித்த அவர் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
முதல் பந்தை எதிர்கொண்டு பின்னர் ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை பேட் செய்த அவர் 59 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். 59 பந்துகளில் 83 ரன்கள் அடித்த கோலி, தனது இன்னிங்ஸில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.