தமிழ் செய்திகள்  /  Cricket  /  Kkr Beat Rcb By 7 Wickets And Become First Away Team Victory In This Season

RCb vs KKR Result: 16.5 ஓவரில் பினிஷ், ஆர்சிபி கோட்டையில் கொடி நட்டிய கொல்கத்தா!இந்த சீசனில் முதல் வெளியூர் அணி வெற்றி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 29, 2024 11:12 PM IST

இந்த சீசனில் முதல் வெளியூர் அணி வெற்றியாக பெங்களுருக்கு சென்று ஆர்சிபி அணியை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வீழ்த்தியுள்ளது கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ்

பந்தை பவுண்டரிக்கு அடிக்கும் சுனில் நரேன்
பந்தை பவுண்டரிக்கு அடிக்கும் சுனில் நரேன் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நிதிஷ் ராணாவுக்கு பதிலாக அனுகுல் ராய் சேர்க்கப்பட்டார்.

கோலி அதிரடியால் ஆர்சிபி ரன் குவிப்பு

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி கடைசி வரை அவுட்டாகாமல் 83 ரன்கள் எடுத்திருந்தார்.

கொல்கத்தா பவுலர்கள் ஹர்ஷித் ராணா, ஆண்ட்ரே ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

கொல்கத்தா சேஸிங்

இதைத்தொடர்ந்து சேஸிங்கில் களமிறங்கிய கொல்கத்தா 16.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து, 19 பந்துகள் மீதமருக்க 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக சுனில் வெங்கடேஷ் ஐயர் 50, நரேன் 47, ஷ்ரேயாஸ் 39 ரன்கள் எடுத்தனர். ஆர்சிபி பவுலர்களில் யாஷ் தயாள், மயங்க் தாகர், விஜயகுமார் வைஷாக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

அதிரடி ஓபனிங்

கொல்கத்தாவுக்கு அதிரடியான ஓபனிங்கை பில் சால்ட் - சுனில் நரேன் ஆகியோர் தந்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 86 ரன்களை 6.3 ஓவரில் சேர்த்தனர்.

இதில் சுனில் நரேன் தொடக்கம் முதல் சிக்ஸர்களை நலாபுறமும் பறக்க விட்டார், 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 22 பந்துகளில் 47 ரன்கள் அடித்து நரேன் அவுட்டனார்.

அதேபோல் சால்ட் தன் பங்குக்கு 20 பந்துகளில் 30 ரன்கள் அடித்து வெளியேறினார்.

வெங்கடேஷ் ஐயர் வானவேடிக்கை

ஓபனிங் பேட்ஸ்மேன்கள அவுட்டான பின்பு பேட் செய்ய வந்த வெங்கடேஷ் ஐயரும் விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து வான வேடிக்கை நிகழ்த்திய அவர் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 30 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அவுட்டானார்.

கடந்த போட்டியில் டாப் ஆர்டர் சொதப்பிய நிலையில், இந்த போட்டியில் முதல் மூன்று பேட்ஸ்மேன்களின் அதிரடியால் தேவைப்படும் ரன் ரேட் குறைவாக இருந்தது.

அப்போது களத்தில் இருந்த ஷ்ரேயாஸ் எந்த சிரமமும் இன்றி ஆட்டத்தை பினிஷ் செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் 2024 தொடரில் இதுவரை நடந்து முடிந்த 9 போட்டிகளில் உள்ளூர் அணிகளே வெற்றி பெற்றிருந்தது என்ற நிலையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மாற்றியமைத்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

IPL_Entry_Point