தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Sunil Narine: இன்னும் 18 ரன்கள் தேவை! ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக மைல்கல் சாதனையை நோக்கி சுனில் நரேன்

Sunil Narine: இன்னும் 18 ரன்கள் தேவை! ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக மைல்கல் சாதனையை நோக்கி சுனில் நரேன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 26, 2024 04:50 PM IST

ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆல்ரவுண்டர் சுனில் நரேன், யாருமே நிகழ்த்திடாத மைல்கல் சாதனையை செய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது. அதற்கு அவருக்கு இன்னும் 18 ரன்கள் தேவை. ஐபிஎல் 2024 தொடரின் கடைசி போட்டியான இன்று அவர் அதை செய்வாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக மைல்கல் சாதனையை நோக்கி சுனில் நரேன்
ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக மைல்கல் சாதனையை நோக்கி சுனில் நரேன் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இதில் இரண்டு முறை கோப்பை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஒரு முறை கோப்பை வென்ற சன் ரைசர்ஸ் அணிகள் பலப்பரிட்சை செய்ய இருக்கின்றன.

சுனில் நரேன் சாதனை

இதையடுத்து இந்த போட்டியில் ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் வீரராக தனித்துவமான மைல்கல் சாதனை நிகழ்த்தும் வாய்ப்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆல்ரவுண்டர் சுனில் நரேனுக்கு அமைந்துள்ளது. அவர் இன்றைய போட்டியில் 18 ரன்கள் அடித்தால் அந்த சாதனையை நிகழ்த்தலாம்.

இந்த சீசனில் இதுவரை 13 போட்டிகள் விளையாடியிருக்கும் சுனில் நரேன், 482 ரன்கள், 179.85 ஸ்டிரைக் ரேட் உடன் அடித்துள்ளார். அத்துடன் பவுலிங்கில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி, எகானமி 6.90 என வைத்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் நரேன், 18 ரன்கள் அடித்தால் ஒரே சீசனில் 500 ரன்கள், 15 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை பெறுவார். அவ்வாறு செய்யும்பட்சத்தில் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக நடக்கும் இந்த நிகழ்வு மைல்கல் சாதனையாகவும் அமையும்.

கொல்கத்தாவுக்கு 500+ ரன்கள் அடித்தவர்கள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கெளதம் கம்பீர், ஆண்ட்ரே ரசல், ராபின் உத்தப்பா ஆகியோர் இதற்கு முன்னர் 500 ரன்களுக்கு அதிகமாக அடித்துள்ளார்கள். நரேன் இன்றைய ஆட்டத்தில் 18 ரன்கள் அடித்தால், கொல்கத்தாவுக்காக 500 ரன்கள் அடித்த நான்காவது பேட்ஸ்மேன் என்ற மற்றொரு சாதனையும் நரேன் புரிவார்.

லீக் சுற்றில் முதல் இடத்தில் கொல்கத்தா

ஐபிஎல் 2024 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருந்து வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14 போட்டிகளில் 8 வெற்றி, 3 தோல்வியுடன் மொத்தம் 20 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது.

இதன் பின்னர் குவாலிபயர் 1 போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தற்போது இறுதிப்போட்டியில் மீண்டும் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

இந்த சீசனில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக மோதிய இரண்டு போட்டிகளிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றியை பெற்றுள்ளது. இதையடுத்து ஹார்ட்ரிக் வெற்றியுடன் மூன்றாவது ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் இறுதிப்போட்டியில் களமிறங்க இருக்கிறது.

இறுதிப்போட்டியில் மோத இருக்கும் இரு அணிகளின் முழு விவரம்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், தங்கராசு நடராஜன், ஜெய்தேவ் உனட்கட், ஷாபாஸ் அகமது, உம்ரான் மாலிக், சன்விர் சிங், க்ளென் பிலிப்ஸ், மயங்க் மார்கன்டே, வாஷிங்டன் சுந்தர், அன்மோல்ப்ரீத் சிங், உபேந்திர யாதவ், ஜாதவேத் சுப்ரமணியன், விஜயகாந்த் வியாஸ்காந்த், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, மார்கோ ஜான்சன், ஆகாஷ் மகராஜ் சிங்

கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), சுனில் நரேன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, அனுகுல் ராய், மனிஷ் பாண்டே, நிதிஷ் ராணா, ருஷ்ஃபார் ருஷ்ஃபார், ஸ்ரீகர்ம் , சேத்தன் சகாரியா, அங்கிரிஷ் ரகுவன்ஷி, சாகிப் ஹுசைன், சுயாஷ் ஷர்மா, அல்லா கசன்ஃபர்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024