தமிழ் செய்திகள்  /  Cricket  /  Ipl 2024 Schedule: Dhoni Vs Kohli Showdown As Csk Host Rcb In Opener On March 22

IPL 2024 schedule: சேப்பாக்கில் பெங்களூரு உடன் மோதும் சென்னை! ஐபிஎல் 2024 அட்டவணை வெளியானது!

Kathiravan V HT Tamil
Feb 22, 2024 05:52 PM IST

”நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் 15 நாட்கள் நடைபெறும் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது”

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK-Twitter)

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் 15 நாட்கள் நடைபெறும் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் மீதமுள்ள போட்டிகளுக்கான பட்டியல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் இரண்டு வாரங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு டபுள் ஹெடர்கள் இடம்பெறும். பஞ்சாப் டெல்லி கேபிடல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும் எதிர்கொள்கிறது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் டபுள் ஹெடர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்கோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியையும், கடந்த ஆண்டு ரன்னர்-அப் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணியானது ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியையும் எதிர்கொள்கின்றன. 

இதன்படி, 10 அணிகள் 5 பேர் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குழு கட்டத்தில், ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள மற்ற நான்கு அணிகளுடன் தலா இரண்டு முறை 14 ஆட்டங்களில் விளையாடுகின்றன.

ஏப்ரல்-மே மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில்தான், ஐபிஎல், முழுமையாக, வெளிநாடுகளில் (தென்னாப்பிரிக்கா) நடத்தப்பட்டது, அதே நேரத்தில் 2014 ஆண்டில் சில போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு மாற்றப்பட்டன. இருப்பினும், 2019 ஆம் ஆண்டில், தேர்தல்கள் இருந்தபோதிலும் போட்டி இந்தியாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

IPL_Entry_Point