IPL 2024: MI அணிக்கு ஹர்திக் வந்தது எப்படி.. GT புதிய கேப்டன் யார்?
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ipl 2024: Mi அணிக்கு ஹர்திக் வந்தது எப்படி.. Gt புதிய கேப்டன் யார்?

IPL 2024: MI அணிக்கு ஹர்திக் வந்தது எப்படி.. GT புதிய கேப்டன் யார்?

Manigandan K T HT Tamil
Nov 27, 2023 02:34 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஹர்திக் பாண்டியா மீண்டும் களமிறங்க உள்ளார்.

ரோகித் சர்மாவுடன் ஹர்திக் பாண்டியா (File photo)
ரோகித் சர்மாவுடன் ஹர்திக் பாண்டியா (File photo) (BCCI-IPL)

குஜராத் டைட்டன்ஸ் அணியே இத்தகவலை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அத்துடன், தனது அணிக்கான புதிய கேப்டனாக சுப்மன் கில்லை அறிவித்துள்ளது குஜராத்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவின் துணை கேப்டனான பாண்டியா, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸில் இடம்பெற்றார். நட்சத்திர ஆல்-ரவுண்டர் தனது ஐபிஎல் பயணத்தை 2015 இல் மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் அறிமுகமானார்.

2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மும்பையின் சாம்பியன்ஷிப் வென்ற அணியில் ஹர்திக் பாண்டியா அங்கம் வகித்தார். இருப்பினும், ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸால் ஹர்திக் விடுவிக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தனது கேப்டனாக அறிமுகமான ஹர்திக், 2022 இல் குஜராத் டைட்டன்ஸின் முதல் ஐபிஎல் தொடரில் முதல் பட்டத்தை வென்றார்.

ஹர்திக்கின் தலைமையின் கீழ், குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் 2023 இன் இறுதிப் போட்டிக்கு நுழைந்து ரன்னர்-அப் ஆனது. பாண்டியா டைட்டன்ஸிடம் இருந்து விட்டு விலகி மும்பை இந்தியன்ஸுக்கு மாறுவது குறித்து ஊகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தபோதிலும், ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் தக்கவைப்பு விண்டோ முடிவடையும் தருணத்தில் அவரை குஜராத் டைட்டன்ஸ் தக்க வைத்துக் கொண்டதாக அறிவித்தது.

ஆனால், சமீபத்திய தகவலின்படி, அவரை தங்கள் அணிக்கு வாங்குவதற்கு மும்பை இந்தியன்ஸ் முயற்சி மேற்கொண்டு வெற்றி அடைந்ததாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதை உறுதிப்படுத்தும் வகையில், குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகமும், இது அதிகாரப்பூர்வ தகவல். ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டார். வாழ்த்துக்கள் பாண்டியா. உங்களை மிஸ் செய்வோம் என குறிப்பிட்டுள்ளது.

ஹர்திக்கை MI ஒப்பந்தம் செய்தது எப்படி

குஜராத்தில் இருந்து பாண்டியாவை ஒப்பந்தம் செய்வதற்காக, ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை (INR 17.5 கோடி) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (RCB) அனுப்ப மும்பை இந்தியன்ஸ் மற்றொரு டிரேடையும் அனுமதித்துள்ளது.

டிசம்பர் 12 ஆம் தேதி வரை அனைத்து 10 அணிகளும் வீரர்களை டிரேடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை RCB க்கு அனைத்து பண பேரத்தில் டிரேடு செய்தது MI. அதன் பிறகு குஜராத் டைட்டன்ஸ் உடனான அனைத்து பண ஒப்பந்தத்தையும் தீர்த்துக்கொள்ளவும் ஹர்திக்கின் சேவைகளை வாங்கவும் அவர்களுக்கு தேவையான நிதி இருந்தது" என்று BCCI மூத்த அதிகாரி தெரிவித்தார்.

ஹர்திக் எவ்வளவு ஈட்டுவார்?

பாண்டியாவின் தற்போதைய மதிப்பு ரூ. 15 கோடி மற்றும் மும்பை ஆல்ரவுண்டர் தனது புதிய உரிமையில் அதே தொகையை ஈட்டுவார். ஆல்ரவுண்டர் பாண்டியா வெளியேறிய பிறகு ஜிடியின் பர்ஸ் 15 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆல்-ரவுண்டர் பாண்டியா தனது முன்னாள் உரிமையாளரான குஜராத் டைட்டன்ஸிடம் இருந்து 50% பரிமாற்ற கட்டணத்தை பெற உள்ளார். 

குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஹர்திக்கின் சிறப்பான சாதனை

ஹர்திக் 41.65 சராசரியில் 833 ரன்கள் எடுத்தார். குஜராத் டைட்டன்ஸில் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 133.49 ஐ எட்டினார். 8.10 எகானமியுடன் 11 விக்கெட்டுகளையும் எடுத்தார். கேப்டனாக முதல் சீசனில் கோப்பையை வென்றதுடன், ஐபிஎல் 2022 இறுதிப் போட்டியில் பாண்டியா ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹர்திக்கின் குஜராத் டைட்டன்ஸ் அணி 2022 மற்றும் 2023 சீசன்களில் ஐபிஎல் தரவரிசையிலும் முதலிடம் பிடித்தது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.