IPL 2024: சிஎஸ்கே அணிக்கு பிரியாவிடை கொடுத்த ஆல்ரவுண்டர்! விடுவிக்கப்பட்ட, மொத்த வீரர்களின் லிஸ்ட்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ipl 2024: சிஎஸ்கே அணிக்கு பிரியாவிடை கொடுத்த ஆல்ரவுண்டர்! விடுவிக்கப்பட்ட, மொத்த வீரர்களின் லிஸ்ட்

IPL 2024: சிஎஸ்கே அணிக்கு பிரியாவிடை கொடுத்த ஆல்ரவுண்டர்! விடுவிக்கப்பட்ட, மொத்த வீரர்களின் லிஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 26, 2023 04:32 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு ஓய்வை அறிவித்த நிலையில், பென் ஸ்டாக்ஸ் வரும் ஐபிஎல் 2024 தொடரிலிருந்து விலகியுள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் டுவெய்ந் ப்ரீடோரியஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களின் லிஸ்ட் இதோ
சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களின் லிஸ்ட் இதோ

ஐபிஎல் போட்டிகளில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று வெற்றிகரமான அணியாக வலம் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பவுலிங் ஆல்ரவுண்டராக இருந்து வந்த டுவெய்ன் ப்ரீடோரியஸை விடுவித்துள்ளது. முன்னாள் தென்ஆப்பரிக்கா வீரரான இவர், சிஎஸ்கே அணிக்கு பிரியா விடை கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் , " சிஎஸ்கே. சிஎஸ்கே அணி நிர்வாகம், பயிற்சியாளர்கள், வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு எனக்கு அற்புதமான அனுபவம் கிடைத்தது. நான் ஏராளமான விஷயங்களை கற்றுக்கொண்டேன். 2024 சீசனுக்காக சிஎஸ்கே அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் 2022 சீசனில் மெகா ஏலத்தில் ரூ. 50 லட்சத்துக்கு வாங்கப்பட்ட ப்ரீடோரியஸ், 2022 மற்றும் 2023 சீசன் சேர்த்து 7 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

ஏற்கனவே சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் 2024 சீசனில் இருந்து விலகியிருக்கும் நிலையில், மற்றொரு வெளியாநாட்டு வீரரான ப்ரீடோரிஸ் விடுவிக்கப்பபட்டுள்ளார். இதனால் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறும் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி இரண்டு வெளிநாட்டு வீரர்களை எடுக்கும் வாய்ப்பு உள்ளது.

சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களின் விவரம்: அம்பத்தி ராயுடு, கெய்ல் ஜேமிசன், சிசாடா மக்லா, ஆகாஷ் சிங், பென் ஸ்டோக்ஸ், டுவெய்ன் ப்ரீடோரியஸ், சுப்ரான்ஸு சேனாபதி, பகத் வர்மா

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.