IPL 2023 Auction: ஐபிஎல் 2024 தொடர் ஏலம் எப்போது? வெளியான தகவல் - லிஸ்டில் இருக்கும் ஸ்டார் வீரர்கள்
பத்து ஐபிஎல் கிளப்புகளும் தங்கள் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை நவம்பர் 15 ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். அதன் பின்னர் ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் பட்டியில் டிசம்பர் தொடக்கத்தில் இறுதி செய்யப்படும்.
ஐபிஎல் 2024 தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் வைத்து நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் முறையாக ஐபிஎல் ஏலம் இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டில் நடைபெற இருக்கிறது.
தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா அந்த அணிக்கு எதிராக இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இதே நாளில் தான் விளையாடவுள்ளது. இந்தப் போட்டி க்கெபெர்ஹாவில் வைத்து நடைபெறுகிறது.
ஐபிஎல் 2024 தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தங்கள் அணிக்கான பட்டியலை உருவாக்க ரூ. 100 கோடி வரை செலவழிக்கலாம். இது கடந்த சீசனில் ஒவ்வொரு அணியும் செலவிட்ட ரூ. 95 கோடியை விட ரூ. 5 கோடி அதிகமாகுமாக உள்ளது. ஏலத்தின் நாளில் ஒவ்வொரு அணியும் செலவழிக்க வேண்டிய தொகை, அவர்கள் வெளியிடும் வீரர்களின் மதிப்பு மற்றும் 2023 ஏலத்தில் இருந்து செலவழிக்கப்படாத தொகை ஆகியவற்றை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.
அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகபட்சமாக ரூ. 12.20 கோடியை வைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ. 6.55 கோடி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ரூ. 4.45 கோடி, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ரூ. 3.55 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 3.35 கோடி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ. 1.65 கோடி, சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 1.5 கோடி தங்களது பர்ஸில் வைத்துள்ளது. இந்த லிஸ்டில் கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 0.05 கோடியை வைத்துள்ளது.
ஐபிஎல் 2024 தொடருக்கான ஏலம் ஒரே நாளில் மட்டும் நடைபெறவுள்ளன. இதுபோன்ற மினி ஏலம் சில காஸ்ட்லியான டீல்கள், குறிப்பாக வெளிநாட்டு வீரர்களுக்கு நல்ல ஜாக்பாட்டாக அமையும்.
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக பஞ்சாப் கிங்ஸ் அணியை சேர்ந்த சாம் கரன் உள்ளார். இவரை ஐபிஎல் 2023 மெகா ஏலத்தில் பஞ்சாப் அணி ரூ. 18.5 கோடிக்கு வாங்கியது.
இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஏலத்தில் மேலும் சர்வதேச அளவிலான முக்கிய வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என தெரிகிறது. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், அவரை தங்களது அணியில் எடுப்பதற்கு போட்டா போட்டி நிலவும் என எதிர்பார்க்கலாம்.
இவரை போல் கடந்த ஆண்டில் ஐபிஎல் போட்டியை மிஸ் செய்த பேட் கம்மின்ஸ், ஆஸ்திரேலியா வீரர் ட்ராவிஸ் ஹெட், இங்கிலாந்து வீரர்கள் கிறிஸ் வோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், சாம் பில்லிங்ஸ், தென் ஆப்பரிக்கா வீரர் ஜெரால்ட் கோட்ஸி ஆகியோரும் ஏலத்தில் பங்கேற்கவுள்ளார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்