தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Inzamam Ul Haq: எப்படி இருந்த மனுஷன்! ஆள விடுங்கடா சாமின்னு எஸ்கேப் - தேர்வு குழு தலைவர் பதவியிலிருந்து விலகிய இன்சமாம்

Inzamam ul haq: எப்படி இருந்த மனுஷன்! ஆள விடுங்கடா சாமின்னு எஸ்கேப் - தேர்வு குழு தலைவர் பதவியிலிருந்து விலகிய இன்சமாம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 31, 2023 12:25 PM IST

டாப் அணிகள் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பரிக்கா மட்டுமில்லாமல் வளர்ந்து வரும் அணியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் தோல்வியை தழுவிய பாகிஸ்தான், இன்று நடைபெறும் வங்கேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறாவிட்டால் உலகக் கோப்பை 2023 தொடரின் நாக்அவுட் ரேஸில் இருந்து வெளியேறிவிடும்.

பாகிஸ்தான் அணி முன்னாள் வீரரும் தேர்வுக்குழு தலைவருமான இன்சமாம் உல் ஹக்
பாகிஸ்தான் அணி முன்னாள் வீரரும் தேர்வுக்குழு தலைவருமான இன்சமாம் உல் ஹக் (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

விளையாடிய 6 போட்டிகளில் 1 வெற்றி மட்டும் பெற்று வங்கதேசம் அணி வெளியேறியுள்ளது. அதேபோல் டாப் அணியும், நடப்பு சாம்பியனுமான இங்கிலாந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இதுவரை 6 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அத்துடன் நாக்அவுட் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்தது.

இதற்கு அடுத்தபடியாக நாக் அவுட் சுற்று இழக்கும் ஆபத்தில் இருக்கும் அணியாக பாகிஸ்தான் உள்ளது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

இன்று வங்கதேசத்துக்கு எதிராக மோதவுள்ளது பாகிஸ்தான். இன்றைய போட்டியில் வெற்றி பெறாவிட்டால் உலகக் கோப்பை 2023 தொடரிலிருந்து நாக் அவுட்டாகி விடும்.

இந்த சூழ்நிலையில் பாகிஸதான் அணியின் தேர்வு குழு தலைவரான இன்சமாம் உல் ஹக் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். பாகிஸ்தான் அணி பெற்று வரும் தொடர் தோல்வி காரணமாக அவர் ராஜினாம் செய்திருக்ககூடும் என அந்நாட்டு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகக் கோப்பை 2023 தொடர் தொடங்குவதற்கு முன்னர், பாகிஸ்தான் அணி வீரர்கள் விளம்பர வருவாயில் பங்கு, கூடுதல் சம்பளம் மற்றும் போன்ற பல்வேறு விஷயங்களை முன்னிருந்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் மோதல் போக்கை கடைப்பிடித்தனர்.

உலகக் கோப்பை தொடருக்கான தேதிகள் நெருங்கிய நிலையில், வீரர்களின் கோரிக்கைகளை வேறு வழியின்றி நிறைவேற்றிக் கொடுத்தது. அப்போது கிரிக்கெட் அமைப்புக்கும், வீரர்களுக்கும் இடையே பாலமாக செயல்பட்டார் இன்சமாம் உல் ஹக். அந்த நேரத்திலேயே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது.

முன்னணி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் விளம்பர ஏஜென்ட்டாக இருக்கும் தல்ஹா ரெஹ்மானி என்பவரின் யாசோ இன்டர்நேஷனல் லிமிடெட் இன்சமாம் உல் ஹக் நிறுவனத்தில், இன்சாமம் உல் ஹக் பங்குதாரராக இருப்பது தெரியவந்துள்ளது. அந்த விளம்பர நிறுவனம் பாபர் ஆசாம், ஷஹீன் ஷா அஃப்ரிடி, முகமது ரிஸ்வான் ஆகியோரின் விளம்பர ஒப்பந்தங்களை நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இன்சமாம் உல் ஹக் விளம்பர ஒப்பந்தத்தில் இடம் பெறும் வீரர்களுக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கக் கூடும் என்ற புகார் எழுந்த நிலையிலும், உலகக் கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தான் அணி மோசமாக செயல்பட்டு வருவதாலும் இன்சமாம் உல் ஹக் தேர்வுக் குழு தலைவர் பதவியில் இருந்தால் சரியாக இருக்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு அழுத்தம் கொடுத்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே அவர் உலகக் கோப்பை தொடரின் பாதியிலேயே தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தெரிகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point