Indias likely XI: இந்திய அணியில் பலம் என்ன?-உத்தேச பிளேயிங் லெவன் விவரம்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Indias Likely Xi: இந்திய அணியில் பலம் என்ன?-உத்தேச பிளேயிங் லெவன் விவரம்

Indias likely XI: இந்திய அணியில் பலம் என்ன?-உத்தேச பிளேயிங் லெவன் விவரம்

Manigandan K T HT Tamil
Nov 23, 2023 11:41 AM IST

ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகிய மூத்த சாதகர்கள் இல்லாத நிலையில், உலகக் கோப்பை இறுதி லெவன் அணியில் உள்ள ஒரே இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் மீதுதான் பொறுப்பு இருக்கும்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டிக்கு முன்னதாக பயிற்சி அமர்வின் போது சூர்யகுமார் யாதவ் மற்றும் அக்சர் படேல்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டிக்கு முன்னதாக பயிற்சி அமர்வின் போது சூர்யகுமார் யாதவ் மற்றும் அக்சர் படேல் (PTI)

 இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக முதல்முறையாக சூர்யகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷுப்மான் கில் மற்றும் ரோஹித் இருவரும் இல்லாத நிலையில், இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார். அவருடன் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்குவார். 

ஜெய்ஸ்வால் தனது சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் சதம் அடித்ததன் மூலம் சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளார்.

ஐபிஎல்-ஐ தொடர்ந்து சூர்யகுமார் மற்றும் திலக் வர்மா ஆகியோர் மிடில் ஆர்டரை கவனித்துக் கொள்வார்கள். பரபரப்பான ஐபிஎல்லுக்குப் பிறகு தரவரிசையில் உயர்ந்துள்ள ரிங்கு சிங்கும், ஆல்ரவுண்டர் ஷிவம் துபேவும் நிச்சயம் ஜொலிப்பார்கள் என நம்பலாம்.

கடைசி நிமிட காயம் காரணமாக உலகக் கோப்பையை தவறவிட்ட அக்சர் படேல் மீண்டும் அணிக்கு திரும்புகிறார். அக்சர் பேட்டிங்கில் புத்திசாலித்தனமான வீரராக தன்னை நிரூபிக்க முடியும் என்றாலும், அவரது பந்துவீச்சு முக்கியத்துவம் பெறும். சுழலில் ரவி பிஷ்ணோய் மிரட்டுவார்.

பிரசித் கிருஷ்ணாவுடன் இணைந்து வேகப்பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் சிறப்பான பங்களிப்பை ஆற்றுவார் என எதிர்பார்க்கலாம். முகேஷ் குமார் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் லெவன் அணியில் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக இடம் பெற போராடுவார்கள்.

கூடுதல் சுழற்பந்து வீச்சாளர் தேவை என இந்தியா கருதினால், சிவம் துபேக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை களமிறக்கலாம்.

இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்

தொடக்க ஆட்டக்காரர்கள்: இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட்

டாப் மற்றும் மிடில் ஆர்டர்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா

பவர் ஹிட்டர்: ரிங்கு சிங்

ஆல்-ரவுண்டர்: அக்சர் படேல், சிவம் துபே/வாஷிங்டன் சுந்தர்

ஸ்பின்னர்: ரவி பிஷ்னோய்

வேகப்பந்து வீச்சாளர்கள்: அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார்

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.