IPL 2023 Most Wickets: கடந்த சீசன் ஐபிஎல்-இல் அதிக விக்கெட்டுகளை எடுத்த டாப் 5 பவுலர்ஸ்! சிஎஸ்கே பவுலர்ஸ் யார்?
Most Wickets in IPL 2023: கடந்த சீசனில் 14 மேட்ச்களில் விளையாடிய மோகித் சர்மா, 44.1 ஓவர்களை வீசினார். மொத்தம் 361 ரன்களை விட்டுக் கொடுத்தார். எனினும், 26 விக்கெட்டுகளை எடுத்தார். இந்தியாவைச் சேர்ந்தவரான இவரும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக பந்துவீசியவரே!
கடந்த 2023 சீசன் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 பவுலர்களின் லிஸ்ட்டைப் பார்ப்போம்.
முகமது ஷமி
இந்த லிஸ்ட்டில் நம்பர் 1 இடத்தில் இருப்பது இந்திய பவுலர் முகமது ஷமி. இவர் பைனலுக்கு முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் முக்கியப் பங்கு வகித்தார். 17 மேட்ச்களில் விளையாடிய ஷமி, 65 ஓவர்களை ஒட்டுமொத்தமாக வீசினார். 522 ரன்களை விட்டுக் கொடுத்து, 28 விக்கெட்டுகளை சுருட்டினார். இவரது எகானமி, 8.03. இவர் தான் பர்ப்பிள் கேப்பை கைப்பற்றினார்.
மோகித் சர்மா
கடந்த சீசனில் 14 மேட்ச்களில் விளையாடிய மோகித் சர்மா, 44.1 ஓவர்களை வீசினார். மொத்தம் 361 ரன்களை விட்டுக் கொடுத்தார். எனினும், 26 விக்கெட்டுகளை எடுத்தார். இந்தியாவைச் சேர்ந்தவரான இவரும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக பந்துவீசியவரே!
ரஷித் கான்
வேர்ல்டு கிளாஸ் லெக்-ஸ்பின் பவுலரான ஆப்கனைச் சேர்ந்த ரஷித் கானும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடியவரே. இவர் அந்த அணிக்காக கடந்த சீசனில் மொத்தம் 27 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தார். 17 மேட்ச்களில் ஆடிய அவர், 67 ஓவர்களை ஒட்டுமொத்தமாக வீசினார். 552 ரன்களை விட்டுக் கொடுத்தார். இவரது எகானமி 8.23 ஆக இருந்தது. குஜராத் டைட்டன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் இந்த 3 பந்துவீச்சாளர்களின் பங்களிப்பும் அவசியமானதாக இருந்தது என்றால் அது மிகையல்ல.
பியூஷ் சாவ்லா
மும்பை இந்தியன்ஸ் பவுலர் பியூஷ் சாவ்லா 16 மேட்ச்களில் விளையாடி, 22 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இவர் இந்தப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். இவர் மொத்தமாக 61 ஓவர்களை வீசி 495 ரன்களை வழங்கினார். இவரது பெஸ்ட் 22/3. பந்துவீச்சு சராசரி 22.50. எகானமி 8.11 ஆக இருந்தது.
யுஸ்வேந்திர சஹல்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பந்துவீசிய இந்தியாவைச் சேர்ந்த யுஸ்வேந்திர சஹல் இந்த லிஸ்ட்டில் 5வது இடத்தைப் பிடித்தார். மொத்தம் 14 மேட்ச்களில் அவர் 52.5 ஓவர்களை வீசினார். 432 ரன்களை விட்டுக் கொடுத்த அவர், 21 விக்கெட்டுகளை எடுத்தார். இவரது பெஸ்ட் 17/4. எகானமி 8.17. பந்துவீச்சு சராசரி 20.57.
இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் சிஎஸ்கே வீரர்கள் துஷார் தேஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உள்ளனர்.
துஷார் தேஷ்பாண்டே 16 மேட்ச்களில் விளையாடி 21 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 16 மேட்ச்களில் விளையாடி 20 விக்கெட்டுகளை எடுத்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) (ஸ்பான்சர்ஷிப் காரணங்களுக்காக டாடா ஐபிஎல் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆண்கள் டுவென்டி 20 (டி20) கிரிக்கெட் லீக் ஆகும். 2007 இல் BCCI ஆல் நிறுவப்பட்ட IPL லீக், 10 நகரங்களின் அடிப்படையிலான உரிமையுடைய அணிகளால் போட்டியிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட கோடை காலத்தில் ஐபிஎல் நடத்தப்படுவது வழக்கம். இது ஐசிசி ஃபியூச்சர் டூர்ஸ் திட்டத்தில் ஒரு பிரத்யேக சாளரத்தைக் கொண்டுள்ளது, அதாவது ஐபிஎல் சீசன்களில் குறைவான சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்.
ஐபிஎல் உலகிலேயே மிகவும் பிரபலமான கிரிக்கெட் லீக் ஆகும். 2014 இல், அனைத்து விளையாட்டு லீக்குகளிலும் சராசரி வருகையால் ஆறாவது இடத்தைப் பிடித்தது. 2010 இல், ஐபிஎல் யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட முதல் விளையாட்டு நிகழ்வானது. ஐபிஎல் கிரிக்கெட்டைக் காண ரசிகர்கள் தவம் கிடப்பார்கள் என்றால் அது மிகையல்ல. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கிரிக்கெட் ரசிகர்கள் டிவி முன்னால் அமர்ந்து முழு போட்டியை ரசிப்பார்கள்.
இதுவெறும் கிரிக்கெட் போட்டி அல்ல, இதுவொரு திருவிழா. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ஐபிஎல் ரசிகர்கள், தங்களுக்கு பிடித்த அணியின் வீரர்கள் சரியாக விளையாடினால் கொண்டாடவும், சரியாக விளையாடவில்லை என்றால் உரிமையுடன் திட்டவும் செய்வார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்