IPL 2023 Most Sixers: கடந்த சீசன் ஐபிஎல் கிரிக்கெட்டில் சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய வீரர்கள்!
IPL Most Sixers: இந்தப் பட்டியலில் அடுத்து இருப்பவர் கிளென் மேக்ஸ்வெல். ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் கிளென். இவர் கடந்த சீசனில் 14 ஆட்டங்களில் விளையாடி 400 ரன்களை அணிக்காக எடுத்துக் கொடுத்தவர். இவரது அதிகபட்சம் 77. இவர் இருந்தால் ஆர்சிபி அணி ரசிகர்கள் நம்பிக்கையாக இருப்பார்கள்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த சீசனில் அதிக சிக்ஸர்களை விளாசிய டாப் 5 வீரர்கள் யார் யார் என இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
கடந்த சீசனில் ஆர்சிபி, சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்றன. சிஎஸ்கே, குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி கடைசி பந்தில் சிஎஸ்கே த்ரில் வெற்றி கண்டது. அத்துடன் 5வது முறையாக மகுடம் சூடியது. ஐபிஎல் கிரிக்கெட் என்றாலே சிக்ஸர்களுக்கு பஞ்சம் கிடையாது. கடந்த சீசனிலும் சிக்ஸர்கள் பறக்கவிடப்பட்டன. ரசிகர்கள் சிலிர்ப்படைந்தனர். யார் யார் அதிக சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியது என பார்ப்போம்.
ஃபாப் டு பிளெசிஸ்
இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் உள்ளது ஆர்சிபி வீரர் ஃபாப் டு பிளெஸிஸ். இவர் 14 ஆட்டங்களில் விளையாடி 730 ரன்களை குவித்தார். அதில் அதிகபட்சம் ஓர் ஆட்டத்தில் 84 ஆகும். மொத்தம் 36 சிக்ஸர்களை அவர் பறக்க விட்டார். ஃபோர்ஸ் 60 ஐ விரட்டினார். இவரது ஸ்டிரைக் ரேட் 153.68 ஆக இருந்தது.
ஷிவம் துபே
சிஎஸ்கே சிங்கமாக கர்ஜித்தார் ஷிவம் துபே. இவர் 16 ஆட்டங்களில் விளையாடி 418 ரன்களை அந்த அணிக்காக பதிவு செய்தார். 3வது வரிசையில் களமிறங்கி விளையாடினார். ஓர் ஆட்டத்தில் இவரது அதிகபட்சம் 52 ஆக இருந்தது. மொத்தம் 35 சிக்ஸர்களை பறக்கவிட்டார். 12 ஃபோர்ஸ் விரட்டினார்.
சுப்மன் கில்
இவர் லிஸ்ட்டில் இல்லையென்றால் எப்படி? ஐபிஎல் தான் சுப்மன் கில்லுக்கு பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது எனலாம். மிகச் சிறந்த திறமைசாலியாக அடையாளம் காட்டிய ஐபிஎல் கிரிக்கெட்டில் அனல் பறக்க கில்லியாக விளையாடுவதில் பெயர் போனவர் கில். கடந்த சீசனில் அதிரடி காட்ட தவறவில்லை. 17 ஆட்டங்களில் ஆடிய அவர், 890 ரன்களை குவித்தார். 2வது வரிசையில் களமிறங்கிய அவர், ஓர் ஆட்டத்தில் 129 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தார். மொத்தம் 33 சிக்ஸர்களை விளாசி அசத்திய கில், 85 ஃபோர்ஸை அடித்திருக்கிறார்.
கிளென் மேக்ஸ்வெல்
இந்தப் பட்டியலில் அடுத்து இருப்பவர் கிளென் மேக்ஸ்வெல். ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் கிளென். இவர் கடந்த சீசனில் 14 ஆட்டங்களில் விளையாடி 400 ரன்களை அணிக்காக எடுத்துக் கொடுத்தவர். இவரது அதிகபட்சம் 77. இவர் இருந்தால் ஆர்சிபி அணி ரசிகர்கள் நம்பிக்கையாக இருப்பார்கள். அந்த அளவுக்கு அணிக்கு தேவைப்படும் நேரத்தில் கைகொடுக்கும் வீரராக திகழ்ந்து வருகிறார். அவர் ஆஸி., அணிக்காக எப்படி விளையாடுவாரோ அப்படியே ஐபிஎல் கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார் எனலாம். கடந்த சீசனில் மொத்தம் 31 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார் மேக்ஸ்வெல். 29 ஃபோர்ஸ் அடித்திருக்கிறார்.
சிஎஸ்கே ஓபனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் (30 சிக்ஸர்கள்), கொல்கத்தா நம்பிக்கை நாயகன் ரிங்கு சிங் (29 சிக்ஸர்கள்), மும்பை இந்தியன்ஸின் சூர்யகுமார் யாதவ் (28), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் மார்கஸ் ஸ்டாய்னிஸ் (27 சிக்ஸர்கள்), லக்னோ அணியின் நிகோலஸ் பூரன் (26), ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (26) ஆகியோர் இந்த லிஸ்ட்டில் அடுத்தடுத்து உள்ளனர்.
இந்த சீசனிலும் சிக்ஸர்களுக்கு பஞ்சம் இருக்காது என நம்பலாம்.
ஐபிஎல் கிரிக்கெட்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) (ஸ்பான்சர்ஷிப் காரணங்களுக்காக டாடா ஐபிஎல் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆண்கள் டுவென்டி 20 (டி20) கிரிக்கெட் லீக் ஆகும். 2007 இல் BCCI ஆல் நிறுவப்பட்ட IPL லீக், 10 நகரங்களின் அடிப்படையிலான உரிமையுடைய அணிகளால் போட்டியிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட கோடை காலத்தில் ஐபிஎல் நடத்தப்படுவது வழக்கம். இது ஐசிசி ஃபியூச்சர் டூர்ஸ் திட்டத்தில் ஒரு பிரத்யேக சாளரத்தைக் கொண்டுள்ளது, அதாவது ஐபிஎல் சீசன்களில் குறைவான சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்