தமிழ் செய்திகள்  /  Entertainment  /  You Have Brought The House To This Situation Ttf Vasan

TTF Vasan: 'எங்கேயும் வெளியே போக முடியலை.. வீட்டையே இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்க'-டிடிஎஃப் வேதனை

Manigandan K T HT Tamil
Mar 09, 2024 03:53 PM IST

Twin Throttlers youtube channel: twin throttlers என்பது இவரது யூ-டியூப் சேனலின் பெயர். அந்தச் சேனிலில் இவர் நேற்று ஒரு வீடியோவை சோகத்துடன் வெளியிட்டிருந்தார். "முன்னாடிலாம் பைக் இருக்கும். எங்க போகனும்னாலும் போவேன். ஆக்சிடென்ட் ஆனதால பைக்ல போக முடியாது" என்றார்.

யூ-டியூபர், பைக்கர் டிடிஎஃப் வாசன்
யூ-டியூபர், பைக்கர் டிடிஎஃப் வாசன்

ட்ரெண்டிங் செய்திகள்

விதிமுறைகளைப் பின்பற்றாமல் வண்டி ஓட்டி விபத்தில் சிக்கியவர் டிடிஎஃப் வாசன். இவருக்கு யூ-டியூப் சேனலில் லட்சக்கணக்கானோர் பின்தொடர்வோர் உள்ளனர்.

twin throttlers என்பது இவரது யூ-டியூப் சேனலின் பெயர். அந்தச் சேனிலில் இவர் நேற்று ஒரு வீடியோவை சோகத்துடன் வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் கூறுகையில், "நம்ம கோயம்புத்தூர் இருக்கேன். சென்னை கிளம்பிட்டேன். வண்டிகூடவே இருந்துட்டு அது இல்லாம போற நிலைமை யாருக்குமே வந்துடக் கூடாது.

முன்னாடிலாம் பைக் இருக்கும். எங்க போகனும்னாலும் போவேன். ஆக்சிடென்ட் ஆனதால பைக்ல போக முடியாது. கார்ல டிராவல் பண்ணனும்னு டாக்டர் சொல்லிட்டாரு. அதுக்காக புதுசா கார் ஒண்ணு வாங்கினோம். அது இப்போ கொஞ்சம் மாத்த கொடுத்திருக்கிறோம்.

பைக்... கார் எதுவுமே இல்லை. எங்கேயும் வெளியே போக முடியலை. சென்னை போயிட்டு சின்ன சின்ன பர்சேஸ் இருக்கு. அதை முடிச்சிட்டு கோவா போலாம்னு ஒரு பிளான்" என்று கூறிவிட்டு அவருக்கு அருகே இருந்த 3 செல்லப்பிராணிகளை காண்பித்து இவர்களை வாழ்க்கையில் மறக்க மாட்டேன் என்றார் டிடிஎஃப் வாசன்.

செல்லப் பிராணிகளின் சேட்டைகள் குறித்து அவர் பேசுகையில், "எனது கேமிரா உபகரணங்கள் வைக்கும் பெட்டியை கடித்து குதறிவிட்டனர். வீட்டையே இந்த நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டனர் (இவர் தங்கியிருக்கும் அறை முழுவதும் சேதமாகி இருக்கிறது). குக்கர் மூடியை கடித்து வைத்திருக்காங்க" என்று கூறினார்.

பின்னர், சென்னை வந்து வர்மக் கலை வைத்தியரை சந்தித்தார். அதுதொடர்பான காணொளியும் அந்த வீடியோவில் இணைத்திருந்தார்.

கோவையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தற்செயலாக நடிகர் ஹரீஷ் கல்யாணை சந்தித்தது குறித்த தகவலையும் டிடிஎஃப் வாசன் பதிவிட்டிருந்தார்.

டிடிஎஃப் பிட் ஷாப் பற்றிய தகவலையும் பதிவிட்டிருந்தார். இவர் பைக் சம்பந்தப்பட்ட உபகரணங்களை விற்பனை செய்யும் கடையைத் திறக்கவுள்ளார்.

அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரபல யூடியூப்பர் மற்றும் பைக்கராக இருப்பவர் டிடிஎஃப் வாசன். தமிழ்நாட்டில் இவரை தெரியாதவர்கள் மிகவும் குறைவே என்று கூறும் அளவில் மிரட்டும் விதமாகவும், ஆபத்தை விளைவுக்கும் விதமாக பைக்குகளை ஓட்டியும், ஸ்டண்ட் செய்தும் வீடியாேவாக பகிர்ந்துள்ளார்.

சினிமாவில் அறிமுகமாகிறார்

டிடிஎஃப் வாசன் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து பிரபல நடிகையான ஷாலின் ஜோயா என்பவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் டிடிஎஃப் வாசன், அதில் ஹாய் கத்திஜா என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நடிகை ஷாலின் ஜோயா, ஹார்ட் எமோஜியுடன் ரியாக்ட் செய்துள்ளார்.

மலையாள படங்களில் நடித்து வரும் நடிகையான ஷாலின் ஜோயா, தமிழில் ராஜா மந்திரி, கண்ணகி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதைடுத்து டிடிஎஃப் வாசன், நடிகை ஷாலின் ஜோயா ஆகியோர் டேட்டிங்கில் இருப்பதாக கிசுகிசுக்கப்படும் நிலையில், இவர் தான் மஞ்சள் வீரன் படத்தின் ஹீரோயினாக இருக்க கூடும் எனவும் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்