இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா ஓய்வு அறிவிப்பு.. கடைசிப்போட்டி எது?
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா ஓய்வு (Getty)
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, மற்றொரு பெரிய செய்தி வெளியாகியுள்ளது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் விருத்திமான் சஹா தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
40 வயதான மூத்த கிரிக்கெட் வீரரான விருத்திமான் சஹா, தனது 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க முடிவு செய்து ஓய்வு அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபிக்கு பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அவர் கூறியுள்ளார்.
தனது கிரிக்கெட் பயணம் அற்புதமானது என்று சஹா விவரித்தார். கடந்த இரண்டு ரஞ்சி சீசன்களில் திரிபுரா அணிக்காக விளையாடிய சஹா, இந்த ஆண்டு ஆகஸ்டில் வங்காளம் அணிக்காக விளையாடிக்கொண்டு இருந்தார்.