Ind vs Ban Result: நினைத்ததை கெத்தாய் முடித்த ரோகித்.. தொடரை 2-0 என கைப்பற்றிய இந்தியா, சரணடைந்த வங்கதேசம்
India vs Bangladesh 2nd Test: செவ்வாய்க்கிழமை கிரீன் பார்க்கில் நடந்த இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்டின் ஐந்தாவது நாளில் இந்தியா பங்களாதேஷை மொத்தம் 146 ரன்களுக்கு சுருட்ட உதவுகிறது.

Ind vs Ban Result: நினைத்ததை கெத்தாய் முடித்த ரோகித்.. தொடரை 2-0 என கைப்பற்றிய இந்தியா, சரணடைந்த வங்கதேசம். (AP Photo/Ajit Solanki) (AP)
வங்கதேசத்துக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் 5-வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி இலக்கை எட்டி ஜெயித்தது. ஜெய்ஸ்வால் அரை சதம் பதிவு செய்து அசத்தினார். ரோகித் 8 ரன்னிலும், கில் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தாலும் அடுத்து வந்த கோலி, பண்ட் நிதானம் காட்டி இலக்கை அடைந்தனர். இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐந்தாம் நாள் மதிய உணவு இடைவேளையின் போது, பங்களாதேஷ் அணி மீதமுள்ள இரண்டு செஷன்களில் சேஸிங் செய்ய வெறும் 95 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது.
கோலி 29 ரன்களும், பண்ட் 4 ரன்களும் விளாசினர்.
