Ind vs Aus 1st T20I: இந்தியா-ஆஸி., டி20 தொடர் நேரலை எந்த சேனலில் ஒளிபரப்பு?
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Aus 1st T20i: இந்தியா-ஆஸி., டி20 தொடர் நேரலை எந்த சேனலில் ஒளிபரப்பு?

Ind vs Aus 1st T20I: இந்தியா-ஆஸி., டி20 தொடர் நேரலை எந்த சேனலில் ஒளிபரப்பு?

Manigandan K T HT Tamil
Nov 23, 2023 10:57 AM IST

விசாகப்பட்டினத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதல் T20I இரவு 7:00 மணிக்கு தொடங்கும். டாஸ் மாலை 6:30 மணிக்கு போடப்படும்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ்
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் (PTI)

அடுத்த ஆண்டு T20 உலகக் கோப்பை வர இருக்கும் நிலையில் இந்தத் தொடர் அதற்கான பயிற்சி களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல சீனியர் இந்திய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. 

சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் மேட்ச்-வின்னரான டிராவிஸ் ஹெட், டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். கிளென் மேக்ஸ்வெல்லும் ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு முக்கிய வீரராக உள்ளார்.

இந்திய அணியில், உலகக் கோப்பை இறுதி பிளேயிங் லெவன் அணியில் இருந்த ஒரே வீரர் சூர்யகுமார் யாதவ் மட்டுமே இந்தத் தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில் சூர்ய குமால் கேப்டனாக உள்ளார். இஷான் கிஷன் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அங்கம் வகித்தவர்கள்.

ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்ற இளம் வீரர்கள் மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடவுள்ளனர்..

இந்தியா vs ஆஸ்திரேலியா மோதலின் நேரடி ஒளிபரப்பு விவரங்கள் இங்கே:

விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா 1வது டி20 போட்டி இரவு 7:00 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் மாலை 6:30 மணிக்கு போடப்படும்.

ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் கலர்ஸ் சினிப்ளெக்ஸ் டிவி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஜியோ சினிமாவிலும் போட்டியைக் கண்டு ரசிக்கலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.