Ind vs Aus 1st T20I: ‘உலகக் கோப்பை தொடர் முழுவதும் சொன்னபடி செய்தவர் ரோகித்’-சூர்யகுமார் புகழாரம்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Aus 1st T20i: ‘உலகக் கோப்பை தொடர் முழுவதும் சொன்னபடி செய்தவர் ரோகித்’-சூர்யகுமார் புகழாரம்

Ind vs Aus 1st T20I: ‘உலகக் கோப்பை தொடர் முழுவதும் சொன்னபடி செய்தவர் ரோகித்’-சூர்யகுமார் புகழாரம்

Manigandan K T HT Tamil
Nov 23, 2023 10:18 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ் (AFP)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்தத் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சூர்யகுமார் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக ஆடவில்லை. அவர் 28 பந்துகளில் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், டி20 கிரிக்கெட்டில் சரவெடியாய் இருக்கும் சூர்யகுமார் யாதவ், ஆஸி., பவுலர்களுக்கு கடும் சவால் அளிப்பார் என எதிர்பார்க்கலாம்.

தொடரின் முதல் போட்டிக்கு முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பில் சூர்யகுமார் யாதவ் பேசியதாவது:

உலகக் கோப்பை தொடரில் ரோஹித் ஷர்மாவின் லீடர்ஷிப் சிறப்பாக இருந்தது. இந்திய கேப்டன் ஒரு முன்மாதிரியாக இருந்தார், அவரது தலைமைப் பண்புகளுக்கு பெருமை சேர்த்தார். 

அணி ஆலோசனைக் கூட்டங்களில் பேசியதை அவர் மைதானத்தில் செய்து காட்டினார். ஒரு டீம் லீடராக அவர் முன்னுதாரணமாக திகழ்ந்தார். நாங்கள் அதையே இந்தத் தொடரிலும் பிரதிபலிக்க முயற்சிப்போம்" என்றார் சூர்யகுமார் யாதவ்.

விசாகப்பட்டினத்தில் முதல் டி20ஐ தொடர்ந்து, 2வது போட்டி நவம்பர் 26ம் தேதி திருவனந்தபுரத்திலும், மூன்றாவது போட்டி நவம்பர் 28ம் தேதி கவுகாத்தியிலும் நடக்கிறது. நான்காவது போட்டி டிசம்பர் 1ம் தேதி ராய்ப்பூரில் நடக்கிறது, ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி டிசம்பர் 3ம் தேதி பெங்களூரில் நடக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.