தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ind Vs Eng 1st Test: அஸ்வினாக மாறிய அசுர வேக பும்ரா, சாதனையை மிஸ் செய்த போப்! இங்கிலாந்து ஆல்அவுட்

IND vs ENG 1st Test: அஸ்வினாக மாறிய அசுர வேக பும்ரா, சாதனையை மிஸ் செய்த போப்! இங்கிலாந்து ஆல்அவுட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 28, 2024 12:16 PM IST

இந்திய மண்ணில் இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை 4 ரன்னில் மிஸ் செய்த போப், அசுர வேக பும்ராவின் அற்புதமான ஸ்லோ ஆஃப் கட்டரில் கிளீன் போல்டாகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் தனித்துவ சாதனை ஒன்றையும் புரிந்துள்ளார்.

பும்ரா பந்தில் கிளீன் போல்டு ஆன ஆலி போப்
பும்ரா பந்தில் கிளீன் போல்டு ஆன ஆலி போப்

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து இன்று நான்காம் நாள் ஆட்டத்தை இந்தியா தொடர்ந்தது. உணவு இடைவெளிக்கு முன் 420 ரன்களில் எடுத்திருந்த நிலையில் ஆல்அவுட்டானது. இன்று கூடுதலாக 104 ரன்கள் எடுத்துள்ளது. அத்துடன் 229 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கும். இந்தியா இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற 230 ரன்களை சேஸ் செய்ய வேண்டும்.

இன்றைய போட்டியில் 150 ரன்கள் கடந்த ஆலி போப் தொடர்ந்து சிறப்பாக பேட் செய்து வந்தார். அவருடன் சிறிது நேரம் கம்பெனி கொடுத்த ரெஹான் அகமது 28 ரன்களில் அவுட்டானார்.

இவருக்கு அடுத்தபடியாக வந்த டாம் ஹார்ட்லி, போப்புடன் இணைந்த நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் இணைந்து 8வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தனர். ஹார்லி 35 ரன்கள் அடித்து அஸ்வின் பந்தில் போல்டாகி நடையை கட்டினார்.

இதற்கிடையே அபாரமாக பேட் செய்து வந்த ஆலி போப் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 196 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அசுர வேக பந்து வீச்சாளர் பும்ராவின் ஸ்லோ ஆஃப் கட்டரில் ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் ஆட முயன்று கிளீன் போல்டு ஆனார்.

4 ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டதோடு, இந்திய மண்ணில் இரட்டை சதமடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். இருப்பினும் இந்தியாவில் இரண்டாவது இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு அதிகமாக ரன்கள் அடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற தனித்துவ சாதனை புரிந்துள்ளார்.

இந்திய பவுலர்களில் ஸ்பின் பந்து வீச்சுக்கு நன்கு கைகொடுத்து வந்த ஹைதராபாத் ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் 3, ஜடேஜா 2, விக்கெட்டுகளை கைப்பற்றினர். அக்‌ஷர் படேல் ஒரு விக்கெட்டை எடுத்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point