KKR vs SRH: Beast மோடில் கிளாசன் - வெற்றிக்கு அருகில் சென்று தவறவிட்ட சன் ரைசர்ஸ்! கொல்கத்தாவின் ராணா நிகழ்த்திய மேஜிக்
பீஸ்ட் மோட் ஆட்டத்தை வெளிப்படுத்திய சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசன் அணியை வெற்றிக்கு அருகில் அழைத்த சென்ற போதிலும் அதை அடையவில்லை. கடைசி ஓவரில் மேஜிக் நிகழ்த்தி அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார் கொல்கத்தா பவுலர் ஹர்ஷித் ராணா
ஐபிஎல் 2024 தொடரின் மூன்றாவது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே கொல்கத்த ஈடன் கார்டன் மைதனத்தில் நடைபெற்றது. கடந்த சீசனை காயம் காரணமாக மிஸ் செய்த கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இந்த சீசனில் முழு உடல் தகுதியுடன் விளையாட வந்த நிலையில் முதல் போட்டியில் களமிறங்கினார்.
அதேபோல் உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற கேப்டன் பேட் கம்மின்ஸ் சன் ரைசர்ஸ் அணிக்கும், முதல் ஐபிஎல் போட்டியிலும் கேப்டனாக செயல்பட்டார்.
கொல்கத்தா சவாலான இலக்கு
இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசல் 64, ஓபனிங் பேட்ஸ்மேன் சால்ட் 54, ரமன்தீப் சிங் 35, ரிங்கு சிங் 23 ரன்கள் எடுத்தார்கள்
சன் ரைசர்ஸ் பவுலர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த யார்க்கர் மன்னன் நடராஜன்3 விக்கெட்டுகளை எடுத்தார். ஸ்பின்னர் மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டுகளையும், கேப்டன் பேட் கம்மனிஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
சன் ரைசர்ஸ் சேஸிங்
இதைத்தொடர்ந்து மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்த சன் ரைசர்ஸ் அணி 20 ஒவரில் 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது
கொல்கத்தாவுக்கு ஆண்ட்ரே ரசல் போல், சன் ரைசர்ஸ் அணிக்கு ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக பேட் செய்து சிக்ஸர்களாக பறக்கவிட்டார். அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசன் 63, மயங்க் அகர்வால் 32, அபிஷேக் ஷர்மா 32 ரன்கள் எடுத்தனர். கடைசி கட்டத்தில் சிறிய கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷபாஸ் அகமது 16 ரன்கள் எடுத்தார்.
கொல்கத்தா பவுலர்களில் ஹர்ஷித் ராணா 3, ஆண்ட்ரே ரசல் 2 விக்கெட்டுகளை தூக்கினார்கள். சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். அற்புதமாக பந்து வீசிய சுனில் நரேன் வெறும் 19 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார்.
நல்ல தொடக்கம்
சன் ரைசர்ஸ் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஓபனர்கள் மயங்க அகர்வால் அபிஷேக் ஷர்மா ஆகியோர் அளித்தனர். அபிஷேக் ஷர்மா இம்பேக்ட் வீரராக இறக்கப்பட்டார்.
முதல் விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் இணைந்து 60 ரன்கள் சேர்த்தனர். மயங்க் அகர்வால் 32, அபிஷேக் ஷர்மா 32 என அடித்த அடுத்தடுத்து அவுட்டானர்கள்.
இவர்களுக்கு அடுத்தபடியாக பேட் செய்ய வந்த ராகுல் திரிபாதி பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தார். இவருடன் பேட் செய்த மற்றொரு பேட்ஸ்மேன் ஐடன் மார்க்ரம் 18 ரன்கள் அடித்து வெளியேறினார். நிதானமாக பேட் செய்து வந்த ராகுல் திரிபாதியும் 20 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக வந்த அப்துல் சமாத் 15 ரன்னில் நடையை கட்டினார்.
கிளாசன் அதிரடி
சன் ரைசர்ஸ் அணி 5 விக்கெட்களை இழந்த நிலையில் களத்தில் இருந்த கிளாசன் அதிரடி மோடுக்கு மாறினார். தொடர்ந்து கொல்கத்தா பந்து வீச்சாளர்கள் பந்துகளை நாலாபுறமும் சிக்ஸர்களாக பறக்கவிட்டார்.
கொல்கத்தா அணியில் ஆண்ட்ர் ரசல் போல் சன் ரைசர்ஸ் அணிக்கு கிளாசன் அதிரடி தாண்டவம் ஆடினார். கடைசி ஓவர் வரை ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவர் 29 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். தனது இன்னிங்ஸில் 8 சிக்ஸர்களை அவர் பறக்கவிட்டார்.
கடைசி ஓவர் த்ரில்
ஆட்டத்தின் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார் கிளாசன். இதன் பின்னர் அந்த ஓவரில் 3வது பந்தில் ஷபாஸ் அகமது, 4வது பந்தில் கிளாசன் என அடுத்தடுத்து அவுட்டானார்கள். இதனால் கடைசி பந்தில் 5 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இருந்தபோது கேப்டன் கம்மின்ஸ் களமிறங்கினார். ஆனால் அவர் கடைசி பந்தில் ரன் அடிக்காமல் டாட் பால் ஆக்கினார். இதன் மூலம் கொல்கத்தா த்ரில் வெற்றியை ருசித்தது.
ரன்களை வாரி வழங்கிய ஸ்டார்க், வருண்
ஆட்டத்தின் 19வது ஓவர் திருப்புமுனையாக அமைந்தது. ஸ்டார்க் வீசிய அந்த ஓவரில் நான்கு சிக்ஸர்களை சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் விளாசினர். அந்த ஓவரில் 26 ரன்கள் அடிக்கப்பட்டது. ஸ்டார்க் தனது 4 ஓவர்களில் 53 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட்டுகள் எதுவும் வீழ்த்த வில்லை.
அதேபோல் ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்கள் வீச 55 ரன்கள் அள்ளி வழங்கினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.