ரன் மெஷின்..வெற்றிகரமான கேப்டன்..சாதனைகளின் நாயகி! இந்திய மகளிர் கிரிக்கெட்டின் இறைவி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ரன் மெஷின்..வெற்றிகரமான கேப்டன்..சாதனைகளின் நாயகி! இந்திய மகளிர் கிரிக்கெட்டின் இறைவி

ரன் மெஷின்..வெற்றிகரமான கேப்டன்..சாதனைகளின் நாயகி! இந்திய மகளிர் கிரிக்கெட்டின் இறைவி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 03, 2024 06:30 AM IST

ரன் மெஷின், வெற்றிகராமான கேப்டன், சாதனைகளின் நாயகி என பல பெருமைகளுக்கு சொந்தக்காரியாக இருந்து வருகிறார் இந்திய மகளிர் கிரிக்கெட் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ். கிரிக்கெட் கடவுள் என்று அது சச்சின் டென்டுல்கர் என்று கூறுவதை போல் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் இறைவியாக மிதாலி ராஜ் பாவிக்கப்பட்டார்.

ரன் மெஷின்..வெற்றிகரமான கேப்டன்..சாதனைகளின் நாயகி! இந்திய மகளிர் கிரிக்கெட்டின் இறைவி
ரன் மெஷின்..வெற்றிகரமான கேப்டன்..சாதனைகளின் நாயகி! இந்திய மகளிர் கிரிக்கெட்டின் இறைவி

1999 முதல் 2022 வரை இரண்டு தசாப்தங்களுக்கு மேல் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் அனைத்து வகையான போட்டிகளிலும் விளையாடிய, இந்திய மகளிர் அணியின் கேப்டனாகவும் பல வெற்றிகளை குவித்து அணியை உலக அரங்கில் மிக பெரிய அணியாக உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தார்.

கிரிக்கெட் பயணம்

மிதாலி ராஜ் பெற்றோர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருக்கும் நிலையில், அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிறந்தார். பின்னர் ஹைதராபாத்துக்கு அவரது குடும்பம் குடியேறிய நிலையில் அங்கு தான் கிரிக்கெட் விளையாட்டை விளையாட தொடங்கினார்.

பத்து வயதில் இருந்து பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் இருந்து மிதாலி ராஜ் கிரிக்கெட் பயணம் தொடங்கியுள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் ஏர் இந்தியா அணிக்காக விளையாடிய இவர், பின்னர் ரயில்வேஸ் அணிக்கு மாறினார். தொடர்ந்து மிதாலி ராஜ் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் சர்வதேச போட்டிகளுக்கான வாய்ப்பு கதவுகளை திறந்தது.

மிதாலி ராஜ் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பு இந்திய மகளிர் கிரிக்கெட் ஜாம்பவான்களாக திகழ்ந்த அஞ்சும் பூர்ணிமா ராவ், சோப்ரா, அஞ்சு ஜெயின் போன்றோருடன் இணைந்து விளையாடியுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் ஆட்டம்

முதன் முதலில் 1997 மகளிர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய மகளிர் உத்தேச அணியில் மிதாலி ராஜ் பெயர் இடம்பிடித்தது. ஆனாலும் அவருக்கு இந்திய மகளிர் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது 1999ஆம் ஆண்டில் தான். அயர்லாந்துக்கு எதிராக தான் ஒரு நாள் போட்டியில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதமடித்த மிதாலி ராஜ், 114 ரன்கள் எடுத்து அவுட்டாகமல். இருந்ததுடன். இதன் மூலம் முதல் போட்டியிலேயே தான் ஒரு ரன் மெஷின் என சொல்லாமல் வெளிப்படுத்தினார்.

இதன் பின்னர் ஒரு நாள் போட்டிகளில் சிறந்த டாப் ஆர்டர் பேட்டராக ஜொலித்ததுடன், அணியின் முக்கிய வெற்றிகளுக்கு முக்கிய பங்கு வகித்தார்.

டெஸ்ட் அறிமுகம்

இதைத்தொடர்ந்து 2002இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான மிதாலி ராஜ், அந்த தொடரில் 214 ரன்கள் அடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனிநபரின் அதிகபட்ச ஸ்கோராக ஆஸ்திரேலியாவின் கரேன் ரோல்டன் 209 ரன்கள் என்ற சாதனையை முறியடித்தார். இதை மிதாலி ராஜ் தனது 19வது வயதிலேயே செய்தது மற்றொரு பெருமைக்குரிய விஷயமாக அமைந்தது.

மிகவும் திறன் மிக்க பேட்டராக ஜொலித்த மிதாலி ராஜ், ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடும் பேட்டராகவும், நங்கூரமிட்டு ஆடும் வீராங்கனையாகவும் இருந்து வந்ததுடன் ரன் வேட்டையிலும் ஈடுபடுவதார இருந்து வந்தார்.

இந்திய மகளிர் அணியில் கேப்டன்சி

இந்திய மகளிர் இளம் கேப்டனாக நியமிக்கப்பட்ட மிதாலி ராஜ், 2005 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார். 2006ஆம் ஆண்டு அவருக்கு சிறப்பாக அமைந்தது. இங்கிலாந்துக்கு எதிரான அந்நிய மண் டெஸ்ட் தொடர், ஆசிய கோப்பை தொடரை ஆகியவற்றை இவரது கேப்டன்சியில் இந்தியா மகளிர் வென்றது.

இந்திய அணியை உலகக் கோப்பை போட்டிகளில் இரண்டு முறை பைனல் வரை அழைத்து சென்ற கேப்டனாக இருந்து வருகிறார் மிதாலி ராஜ். 2019இல் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த இவர், 2022இல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

மிதாலி ராஜ் சாதனைகள்

மகளிர் கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களை கடந்த பேட்டர், தொடர்ச்சியாக 7 அரைசதங்கள் அடித்தவர், அதிக அரைசதங்கள் அடித்தவர், சர்வதேச டி20 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்டர், தொடர்ந்து 109 மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை என்ற பல்வேறு பெருமைக்கு சொந்தக்காரராகவும் உள்ளார் மிதாலி ராஜ்.

155 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட இவர், அதிக போட்டிகள் கேப்டன்சி செய்த இந்திய வீராங்கனை, தொடர்ச்சியாக 74 இன்னிங்ஸ் டக் அவுட் ஆகாதவர், மகளிர் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்கள், 50 விக்கெட்டுகள் எடுக்க காரணமானவர் என பல்வேறு சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார். மகளிர் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் அதிக ரன் அடித்த வீராங்கனையாகவும் உள்ளார். 2021இல் சார்லெட் எட்வர்ட்ஸின் 10,273 ரன்கள் என்ற சாதனையை முறியடித்ததன் மூலம் அவர் இதை செய்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தில் உயரிய விருதான அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ, கேல் ரத்னா விருது, விஸ்டன் உலகின் முன்னணி மகளிர் கிரிக்கெட் வீரர் உள்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். 2017ஆம் ஆண்டில் பிபிசி வெளியிட்ட டாப் 100 பெண்களில் ஒருவராக மிதாலி ராஜ் இடம்பிடித்தார். அடிப்படையில் இவர் ஒரு பரதநாட்டியல் டான்ஸரும் கூட.

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் லேடி டென்டுல்கர் என்று வர்ணிக்கப்பட்டதோடு, ரன் மெஷின், மேட்ச் வின்னர் என பல்வேறு பெர்களில் அழைக்கப்படும் மிதாலி ராஜ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.