தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ht Cricket Spl: முறியடிக்கப்படாமல் உள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் சாதனை என்ன தெரியுமா?

HT Cricket SPL: முறியடிக்கப்படாமல் உள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் சாதனை என்ன தெரியுமா?

Manigandan K T HT Tamil
Jun 04, 2024 06:15 AM IST

T20 World Cup cricket: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 9வது எடிஷன் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இதுவரை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முறியடிக்கப்படாத சாதனை ஒன்று உள்ளது. 2007இல் படைக்கப்பட்ட சாதனை என்ன என பாருங்க.

HT Cricket SPL: முறியடிக்கப்படாமல் உள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் சாதனை என்ன தெரியுமா?
HT Cricket SPL: முறியடிக்கப்படாமல் உள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் சாதனை என்ன தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

யுவராஜ் சிங்

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், 12 பந்துகளில் அரை சதம் விளாசினார்.

2007ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான மேட்ச்சில் இந்த அதிரடி அரை சதத்தைப் பதிவு செய்தார் யுவராஜ் சிங். இதுவரை இந்தச் சாதனை முறியடிக்கப்படாமல் உள்ளது.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

மார்கஸ்

ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 17 பந்துகளில் அதிரடி அரை சதம் அடித்திருக்கிறார்.

இவர் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 21 ம் தேதி அயர்லாந்துக்கு எதிரான மேட்ச்சில் அதிரடி அரை சதத்தைப் பதிவு செய்து டாப் 6 பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

கே.எல்.ராகுல்

இந்திய கிரிக்கெட் அணியின் கே.எல்.ராகுல் 18 பந்துகளில் அரை சதம் அடித்திருக்கிறார்.

ஸ்காட்லாந்துக்கு எதிரான மேட்ச்சில் கே.எல்.ராகுல் அதிரடி காண்பித்தார். இந்தப் போட்டி 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி நடந்தது.

ஷோயப் மாலிக்

பாகிஸ்தானைச் சேர்ந்த ஷோயப் மாலிக் 18 பந்துகளில் அரை சதம் பதிவு செய்திருக்கிறார்.

ஸ்காட்லாந்துக்கு எதிராக 2021ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி நடந்த போட்டியில் போட்டியில் அதிரடி காட்டினார் மாலிக்.

ஸ்டீபன் மைபர்க்

நெதர்லாந்து வீரர் ஸ்டீபன் மைபர்க் 17 பந்துகளில் அரை சதம் விளாசினார். இவர் 2014ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி இந்தச் சாதனையைப் புரிந்தார்.

மேக்ஸ்வெல்

ஆஸி., அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் 18 பந்துகளில் அரை சதம் அடித்திருக்கிறார்.

2014ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி கிளென் மேக்ஸ்வெல் இந்தச் சாதனையை படைத்தார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்

"டி20 உலகக் கோப்பை 2024 ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி ஜூன் 2 ஆம் தேதி காலை 6 மணிக்குத் தொடங்குகிறது. இந்த முறை டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகிறது, பெரும்பாலான போட்டிகள் காலை 6 மணி அல்லது இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. 2024 டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இவை நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குரூப்பிலும் ஐந்து அணிகள் உள்ளன.

குரூப் A - இந்தியா, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து, அமெரிக்கா

குரூப் B - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்

குரூப் C - நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா, உகாண்டா

குரூப் D - தென்னாப்பிரிக்கா, இலங்கை, பங்களாதேஷ், நெதர்லாந்து, நேபாளம்

ஒவ்வொரு குரூப்பிலும்

ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அனைத்து அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடுகிறது. அதாவது அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெறும் அணி அதிகபட்சமாக 8 புள்ளிகளைப் பெறும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் சூப்பர் 8 நிலைக்குச் செல்லும். சூப்பர் 8 இல் இரண்டு குழுக்கள் போட்டியிடும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.

டி20 உலகக் கோப்பை 2024 நடைபெறும் இடங்கள்: டி20 உலகக் கோப்பை 2024 மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் உள்ள 9 மைதானங்களிலும் நடைபெறுகிறது. அதில் ஆறு மைதானங்கள் வெஸ்ட் இண்டீஸிலும், மூன்று மைதானங்கள் அமெரிக்காவிலும் உள்ளன. மேற்கிந்திய தீவுகளில், சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம், கென்சிங்டன் ஓவல், பிராவிடன்ஸ் ஸ்டேடியம், டேரன் சமி கிரிக்கெட் மைதானம், அர்னோஸ் வேல் ஸ்டேடியம் மற்றும் பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்.

அமெரிக்காவில், சென்ட்ரல் ப்ரோவர்ட் பார்க், நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் மற்றும் கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியத்தில் போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டி ஜூன் 29ஆம் தேதி பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

டி20 உலகக் கோப்பை 2024