Miami Open 2024: நெதர்லாந்து, ஆஸி., ஜோடிக்கு எதிராக சூப்பர் ஆட்டம்! அரையிறுதிக்கு முன்னேறிய போப்பண்ணா - எப்டன் ஜோடி
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Miami Open 2024: நெதர்லாந்து, ஆஸி., ஜோடிக்கு எதிராக சூப்பர் ஆட்டம்! அரையிறுதிக்கு முன்னேறிய போப்பண்ணா - எப்டன் ஜோடி

Miami Open 2024: நெதர்லாந்து, ஆஸி., ஜோடிக்கு எதிராக சூப்பர் ஆட்டம்! அரையிறுதிக்கு முன்னேறிய போப்பண்ணா - எப்டன் ஜோடி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 28, 2024 05:23 PM IST

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா ஓபன் தொடரை வென்று வரலாற்று சாதனை புரிந்த போப்பண்ணா - எப்டன் ஜோடி தனது பார்மை தொடர்ந்து வருகிறது. தற்போது மியாமி ஓபனில் அரையிறுதி வரை முன்னேறியுள்ளது.

அரையிறுதிக்கு முன்னேறிய போப்பண்ணா எப்டன் ஜோடி
அரையிறுதிக்கு முன்னேறிய போப்பண்ணா எப்டன் ஜோடி

இதையடுத்து நெதர்லாந்தின் செம் வெர்பீக் மற்றும் ஆஸி ஜான்-பேட்ரிக் ஸ்மித் ஆகியோர் போப்பண்ணா - எப்டன் ஜோடி எதிர்கொண்டது.

போப்பண்ணா வெற்றி

இந்த ஆண்டின் தொடக்கத்தில் போப்பண்ணா - எப்டன் ஆகியோர் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரை வென்று வரலாற்று சாதனை புரிந்தனர். இதைத்தொடர்ந்து தங்களது அசத்தலான பார்மை தொடர்ந்து வரும் இவர்கள், பிழைகளையெல்லாம் திருத்தி கொண்டு நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

முதல் செட்டில் 3-6 என்ற பின்னடைவு பெற்றபோதிலும் இரண்டு மற்றும் மூன்றாவது செட்டில் 7-6 (4), 10-7 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்று வென்றனர்.

பாரிஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி

உலக அளவில் 2வது இடத்தை பிடித்திருக்கும் வீரராக இருந்து வரும் 44 வயது போப்பண்ணாவுக்கு இந்த வெற்றி ஏடிபி டபுள்ஸ் ரேங்கிங்கில் டாப் 10 இடத்தில் இருக்கவும், வரும் ஜூலை - ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதையும் உறுதி செய்துள்ளது.

ஜூன் 10ஆம் தேதிக்குள் டாப் 10 ரேங்கில் இருக்கும் வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதிக்கு பரீசிலனை செய்யப்படுவார்.

இந்தியா - ஆஸ்திரேலியா ஜோடி தங்களது அடுத்த போட்டியில் ஸ்பெயின் நாட்டின் மார்செல்

கிரானோல்லர்ஸ், அர்ஜென்டினா நாட்டின் ஹொராசியோ ஜெபல்லோஸ் மற்றும் யுகேவின் லாயிட் கிளாஸ்பூல், நெதர்லாந்தின் ஜீன்-ஜூலியன் ரோஜர் ஆகியோருக்கு இடையிலான போட்டியின் வெற்றியாளரை எதிர்கொள்வார்கள்.

முன்னதாக, இந்த ஆண்டில் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா ஓபன் தொடரை வென்ற போப்பண்ணா தனது டென்னிஸ் கேரியரில் முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார். அத்துடன் முதல் முறையாக உலகின் நம்பர் 1 வீரர் என்ற அந்தஸ்தையும் பெற்றார்.

இந்த வெற்றிக்கு பின்னர் துபாய் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற அவர் காலிறுதி போட்டியில் தோல்வியை தழுவினர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ரவுண்ட் ஆஃப் 32வில் வெளியேறினார். இதனால் முதல் இடத்தை இழந்து இரண்டாவது இடத்துக்கு சென்றார்.

தற்போது மீண்டும் எழுச்சி பெற்றிருக்கும் போப்பண்ணா மியாமி ஓபன் தொடரில் அரையிறுதி வரை முன்னேறியிருக்கிறார். அத்துடன் மற்றொரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.

மியாமி ஓபன் அரையிறுதி

மியாமி ஓபன் அரையிறுதி போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மெட்வெடேவ், இத்தாலியின் ஜன்னிக் சின்னர் ஆகியோர் இதுவரை தகுதி பெற்றுள்ளனர். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், ரஷ்யாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா தகுதி பெற்றுள்ளார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் இத்தாலியின் பவுலினி, எர்ரானி ஜோடியும், கனடாவின் கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி, நியூசிலாந்தின் எரின் ரூட்லிஃப் ஜோடியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.