AFG vs AUS Result: வரலாறு படைத்த ஆப்கன்.. சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வி
t20 World Cup Super 8: டி 20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான். ஆஸி., பவுலர் பாட் கம்மின்ஸின் ஹாட்ரிக் விக்கெட் வீணானது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது.
தொடர்ச்சியான ஹாட்ரிக் விக்கெட்டுகளைப் பெற்ற பாட் கம்மின்ஸின் மகிழ்ச்சி குறுகிய காலத்திற்கு நீடித்தது. 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, கிளென் மேக்ஸ்வெல்லின் 41 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில், குல்பதின் நயீப்பின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தது. குல்பதீன் 4 விக்கெட்டுகளை சுருட்டினார். வெறும் 20 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். கடந்த நவம்பரில் நடந்த ODI உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்கும் வேதனையுடன் கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு, அவர்களின் கனவுகள் இன்று கிங்ஸ்டவுனில் நனவாகின.
ஆப்கானிஸ்தானின் வெற்றி, அரையிறுதியில் இந்தியாவின் இடத்தைப் பாதுகாக்கிறது, மேலும் திங்களன்று 2007 சாம்பியன்களுக்கு எதிராக ஆஸ்திரேலியா கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டநாயகன் யார்?
ஆட்டநாயகனாக குல்பதின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூப்பர் 8 குரூப் 1 இல் இடம்பெற்றுள்ள ஆப்கன்-ஆஸ்திரேலியா இன்று காலை 6 மணிக்கு செயின்ட் வின்சென்ட் மைதானத்தில் மோதியது.
ஆஸி., டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆப்கன் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை ஆப்கன் குவித்தது.
அந்த அணியின் விக்கெட் கீப்பர் குர்பாஸ் 60 ரன்களும், இப்ராஹிம் ஜத்ரான் 51 ரன்களும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர்.
சோபிக்காத ஆஸி., பேட்ஸ்மேன்கள்
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது ஹாட்ரிக்காக அமைந்தது. முந்தைய ஆட்டத்திலும் ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருந்தார் கம்மின்ஸ்.
ஜம்பா 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். ஸ்டோய்னிஸ் 1 விக்கெட்டை சுருட்டினார்.
149 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடியது ஆஸி., ஆனால், அதிரடி மன்னன் டிராவிஸ் ஹெட் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். வார்னர் 3 ரன்களிலும், கேப்டன் மார்ஷ் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கிளென் மேக்ஸ்வெல் நிதானமாக விளையாடி 59 ரன்கள் எடுத்து நம்பிக்கையாக இருந்தார். ஆனாலும் அவரும் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த எந்த வீரரும் நிலைத்து நிற்காமல் தடுமாறி ஆட்டமிழந்தனர். பெரும்பாலும் ஒற்றை இலக்க நம்பரில் ஆட்டமிழந்தனர்.
19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களில் சுருண்டது ஆஸி.,
ஆப்கன் அணியின் குல்பதின் நயிப் 4 விக்கெட்டுகளையும், கேப்டன் ரஷித் கான், நபி, ஒமர்சாய் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும், நவீன் உல்-ஹக் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு பெரிதும் பங்களித்தனர்.
ஒரு வழியாக ஆஸி.,யை வீழ்த்திவிட்டோம். ஆப்கன் கிரிக்கெட் வரலாற்றறில் இது மிகப் பெரிய சாதனை. எங்கள் அணிக்கு சொல்லிக் கொள்லும் அளவுக்கு பெரிய வரலாறுகள் இல்லை. அதனால், இதை மிக முக்கிய தருணமாக பார்க்கிறோம் என்றார் குல்பதின்.
இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை 2024 ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. இந்த மெகா போட்டியில் 20 அணிகள் பங்கேற்கிறது. டி20 உலகக் கோப்பை 2024க்கான அட்டவணை இந்த ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் 9 மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகளில் 6 மைதானங்களில் நடைபெறுகின்றன.
டாபிக்ஸ்