தமிழ் செய்திகள்  /  Cricket  /  Clash Between Rcb And Kkr Today In Chinnasamy Stadium

RCB vs KKR Preview: அதிரடி, அடிதடி இருக்கும் ஐபிஎல் போட்டி! ஆர்சிபி கோட்டையில் ஃபுல் பவருடன் இறங்கும் கொல்கத்தா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 29, 2024 06:15 AM IST

ஆர்சிபியை ஒப்பிடுகையில் பேட்டிங், பவுலிங் என பக்கவான அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளது. ஆனாலும் உள்ளூர் மைதானத்தில் விளையாடுவதை ப்ளஸ் ஆக வைத்து ஆர்சிபி அணி இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.

பெங்களுரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி - கொல்கத்தா அணிகள் இன்று மோதல்
பெங்களுரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி - கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீசனில் ஆர்சிபி அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடிய ஒரு போட்டியில் வெற்றியை பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே மெக்கல்லம் அதிரடி ருத்ர தாண்டவம் ஆடி 158 ரன்கள் அடித்தது, ஐபிஎல் தொடரின் குறைவான ஸ்கோரான 49 ஆல்அவுட், ஆண்ட்ரே ரசலின் அதிரடி ஆட்டம், ஒரு ஊர் காரர்களான கோலி - கம்பீர் மோதல் என இந்த இரு அணிகளுக்கு இடையிலான பழைய போட்டிகளில் பல்வேறு விதமான சம்பவமோ சம்பவங்களாக நிறைந்துள்ளன.

இந்த சூழ்நிலையில் ரன் வேட்டை நிகழ்த்தப்படும் சின்னசாமி மைதானத்தில் போட்டி நடைபெற இருக்கும் நிலையில், மேலும் சுவாரஸ்யத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் வெற்றியை பெற்றிருப்பதால் தன்னம்பிக்கையுடன் இருக்கின்றன.

ஆர்சிபி அணியின் பலம்

கோலியின் பேட்டிங் பார்ம், டூ பிளெசிஸ், மேக்ஸ்வெல் அதிரடி, தினேஷ் கார்த்திக் என பேட்டிங்கில் பக்காவான அணியாக உள்ளது. அந்த வகையில் முதல் பேட்டிங்காக இருந்தாலும், சேஸிங்காக இருந்தாலும் இவர்களில் யாரோ ஒருவர் நிலைத்து நின்றுவிட்டதால் எதிரணிக்கு தொல்லை தான்.

ஆனால் பவுலிங்கை பொறுத்தவரை அனுபவ வீரராக முகமது சிராஜ் மட்டுமே உள்ளார். இவர் விக்கெட் வீழ்த்தும் பவுலராக இல்லாமலும், சிக்கனமான பவுலராகவும் இல்லாமல் இருப்பது பின்னடைவான விஷயமே. மற்ற அனுபவ பவுலராக அல்சாரி ஜோசப் இருந்தாலும், அவரும் ஸ்டிரைக் பவுலராக இல்லாமல் இருக்கிறார். யாஷ் தயாள், மயங்கா டாகர் என இளம் பவுலர்களை நம்பி இருப்பது பலவீனமான விஷயமாகவே உள்ளது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பலம்

ஆர்சிபி போல் கொல்கத்தா அணியிலும் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல் என வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. முதல் போட்டியில் அணியின் டாப் ஆர்டர் சொதப்பிய நிலையில், இந்த போட்டியில் தங்களை நிருபிக்க வேண்டிய சூழ்நிலையில் முன்னணி பேட்ஸ்மேன்கள் உள்ளார்கள். பேட்டிங்கை போல் பவுலிங்கில் வேகப்பந்து வீச்சாளராக ஸ்டார்க், ஸ்பின்னர்களாக வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் என டி20 ஸ்பெஷலிஸ்ட்கள் இருக்கிறார்கள்.

எனவே ஆர்சிபியை ஒப்பிடுகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சற்று வலுவாகவே இருக்கிறது. இருப்பினும் உள்ளூர் மைதானத்தில், உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாட இருப்பது ஆர்சிபி அணிக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

பிட்ச் நிலவரம்

வழக்கமாக சின்னசாமி மைதானம் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கே சாதகமாக இருக்கும். இன்று நடைபெறும் போட்டியில் புதிய பிட்ச் பயன்படுத்தப்படவுள்ளது. லேசாக பச்சை நிறை புற்களுடன் காணப்படும் என்றாலும் பனிப்பொலிவு ஆட்டத்தின் போக்கை மாற்ற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பேட்ஸ்மேன்களின் ஆட்டமாக இந்த போட்டியும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது

ஆர்சிபி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதுவரை

இந்த இரு அணிகளும் 32 முறை இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 18 முறை கொல்கத்தா, 12 முறை ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளன. கடந்த சீசனில் இரண்டு போட்டிகளிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றன. கடைசியாக 2022 சீசனில் ஆர்சிபி அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது. எனவே மீண்டும் அந்த அணிக்கு எதிராக வெற்றி பெற ஆர்சிபி முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point