Rishabh Pant: அடிமேல் அடி..! ரூ. 24 லட்சம் அபராதம் - சிக்கலில் மாட்டிக்கொண்ட ரிஷப் பண்ட்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Rishabh Pant: அடிமேல் அடி..! ரூ. 24 லட்சம் அபராதம் - சிக்கலில் மாட்டிக்கொண்ட ரிஷப் பண்ட்

Rishabh Pant: அடிமேல் அடி..! ரூ. 24 லட்சம் அபராதம் - சிக்கலில் மாட்டிக்கொண்ட ரிஷப் பண்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 04, 2024 06:15 PM IST

டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட்க்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் மற்ற வீரர்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 25%, எது குறைவானதோ அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அவுட்டான ஏமாற்றத்தில் வெளியேறும் ரிஷப் பண்ட்
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அவுட்டான ஏமாற்றத்தில் வெளியேறும் ரிஷப் பண்ட் (PTI)

இதைத்தொடர்ந்து சேஸிங்கில் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் 166 ரன்களுக்கு ஆல்அவுட்டாக, 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.

ரிஷப் பண்ட்க்கு அபராதம்

பேட்ஸ்மேன்களின் அதிரடி சரவெடியால் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த இந்த போட்டியின் முடிவுக்கு பின் டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட்க்கு அபராதம் விதிக்கப்பட்டது.

குறித்த நேரத்தில் பவுலிங் செய்யாமல் இருந்தது, ஐபிஎல் நடத்தை விதிமீறலாக கருதப்பட்டு அவருக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஏற்கனவே, சிஎஸ்கேவுக்கு எதிரான தனது முந்தைய போட்டியில், டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் குறித்த நேரத்தில் பந்து வீசி முடிக்காத காரணத்துக்காக ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டார்.

தற்போது இரண்டாவது முறையாக அதே தவறில் அவர் ஈடுபட்டதால் இந்த முறை ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறை அவர் இந்த தவறை செய்தால் ஒரு போட்டி விளையாடுவதற்கு தடையும் விதிக்கப்படுவார்.

டெல்லி அணி வீரர்களுக்கும் அபராதம்

குறிப்பிட்ட நேரத்தில் ஓவர்கள் வீசாத தவறை இரண்டாவது முறையாக செய்திருப்பதால் டெல்லி அணியை சேர்ந்த வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ. 6 லட்சம் அல்லது போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம், இதில் எது குறைவானதோ அதை அபராதமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதம் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய அபிஷேக் போரலுக்கும் பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் தனது அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி வரும் ஞாயிற்றுகிழமை மும்பை வான்கடே மைாதானத்தில் நடைபெறுகிறது.

டெல்லி கேபிடல்ஸ் இதுவரை விளையாடியிருக்கும் 4 போட்டிகளில் 1 வெற்றியை மட்டும் பெற்றுள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

இந்த சீசனில் இதுவரை வெற்றியை பெறாத அணியாக மும்பை இந்தியன்ஸும், தோல்வியை சந்திக்காத அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் இருந்து வருகின்றன.

டெல்லியை வதம் செய்த கொல்கத்தா

டெல்லி பவுலர்களை அதிரடியாக பிரித்தெடுத்தனர் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள். அந்த அணியில் ஓபனராக பேட் செய்த நரேன் 39 பந்துகளில் 85 ரன்கள் அடித்தார். இவரை தொடர்ந்து அங்கிரிஷ் ரகுவன்ஷி 27 பந்துகளில் 54, ஆண்ட்ரே ரசல் 19 பந்துகளில் 41 ரன்கள் அடித்தனர். கடைசியாக பேட் செய்ய வந்த ரிங்கு சிங் 8 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

டெல்லி அணியின் ஸ்டிரைக் பவுலரான அன்ரிச் நார்ட்ஜே 59 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.