Sukran In Thulam: துலாம் ராசியில் ஏறும் சுக்கிரன்.. பெட்டி பெட்டியாகப் பணத்தைத் தூக்கப்போகும் ராசிகள்-zodiac signs blessed by lord venus rising in libra - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukran In Thulam: துலாம் ராசியில் ஏறும் சுக்கிரன்.. பெட்டி பெட்டியாகப் பணத்தைத் தூக்கப்போகும் ராசிகள்

Sukran In Thulam: துலாம் ராசியில் ஏறும் சுக்கிரன்.. பெட்டி பெட்டியாகப் பணத்தைத் தூக்கப்போகும் ராசிகள்

Marimuthu M HT Tamil
Sep 27, 2024 07:39 AM IST

Sukran In Thulam: துலாம் ராசியில் ஏறும் சுக்கிரன்.. பெட்டி பெட்டியாகப் பணத்தைத் தூக்கப்போகும் ராசிகள் குறித்துக்காண்போம்.

Sukran In Thulam: துலாம் ராசியில் ஏறும் சுக்கிரன்.. பெட்டி பெட்டியைப் பணத்தைத் தூக்கப்போகும் ராசிகள்
Sukran In Thulam: துலாம் ராசியில் ஏறும் சுக்கிரன்.. பெட்டி பெட்டியைப் பணத்தைத் தூக்கப்போகும் ராசிகள்

துலாம் ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி அன்று மதியம் 1:42 மணிக்கு நடந்திருக்கிறது. இதன் தாக்கம் 12 ராசிகளிலும் எதிரொலிக்கும். அதில் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் 5 ராசிக்காரர்களுக்கு இருக்கும். சுக்கிரன் மற்றும் லட்சுமி தேவி இந்த ராசிக்காரர்களுக்கு ஏராளமான செல்வத்தையும் ஆடம்பரமான வாழ்க்கையையும் தருவார்கள். இந்த நபர்கள் அக்டோபர் 13, 2024-க்கு முன் வரை இந்த நன்மைகளைப் பெறுவார்கள்; இந்த நேரத்தில் எந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

சுக்கிரனின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

மேஷம்: துலாம் ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பது,மேஷ ராசியினருக்கு அதிக நன்மைகளை கிடைக்கச் செய்யும். இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் காதல் மற்றும் அன்பு அதிகரிக்கும்.

ரிஷபம்: சுக்கிரன் ரிஷப ராசிக்காரர்களின் அதிபதி. எனவே, துலாம் ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பது, ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பு ஆசீர்வாதங்களை வழங்குகிறது. சுக்கிரனின் இந்தப் பெயர்ச்சி ரிஷப ராசியினருக்கு நிறைய நன்மைகளை வழங்கும். செல்வம் பெருகும். வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். சுகமும் செழிப்பும் உண்டாகும் எனக் கூறப்படுகிறது. வாழ்க்கைத்துணையுடனான உறவு பலமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு காதல் துணை கிடைக்கலாம். மொத்தத்தில், இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கை இருக்கும்.

கடகம்:

துலாம் ராசியில் சுக்கிரனின் இந்தப் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். பணம் பல வழிகளில் இருந்து வரும். வியாபாரம் பெருகும். உங்கள் திட்டங்கள் வெற்றியடையும்.

துலாம்: சுக்கிரன் துலாம் ராசிக்கு மட்டுமே பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த ராசிக்காரர்கள் மட்டுமே அதிகபட்ச பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு நிறைய செல்வமும் செழிப்பும் கிடைக்கும். நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் இலகுவாகவும் உணர்வீர்கள். அனைத்து பிரச்னைகளும் மன உளைச்சலும் நீங்கும்.

கும்பம்:

துலாம் ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்குப் பல நன்மைகளைத் தரும். இந்த மக்கள் அன்னை லட்சுமியின் ஆசீர்வாதத்தையும் பெறுவார்கள். இத்தனை நாட்களாக பணத்தைப் பெற்றுக்கொண்டு, தராமல் இழுத்தடிக்கும் கும்ப ராசியினருக்கு, கிடைக்க வேண்டிய இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். செலவு குறைவாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகள் இப்போது தொடங்கும். மொத்தத்தில் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

ஆன்மிகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!

Whats_app_banner

டாபிக்ஸ்