தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sukran: சுக்கிர பகவானால் அதிர்ஷ்டம் பெற்ற ராசிகள்

Lord Sukran: சுக்கிர பகவானால் அதிர்ஷ்டம் பெற்ற ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 13, 2023 12:00 PM IST

சுக்கிரனின் நகர்வால் பண மழையில் நனையும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சுக்கிர பகவான்
சுக்கிர பகவான்

ஒரு சில கிரகத்தின் இடமாற்றமானது மிகவும் பெரிதாக பார்க்கப்படுகிறது. இடமாற்றத்தின் போது சில ராசிகளுக்கு, அசுப பலன்களும் சில ராசிகளுக்கு சுப பலன்களும் கிடைக்கும். ராகு கேது, சனி, சூரியன், சுக்கிரன், குருபகவான் செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

செப்டம்பர் 4 ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு நகர்ந்துள்ளார். இது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

கணவரில் எந்த குறையும் இருக்காது. மற்றவர்களிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தேவையில்லாத அலைச்சல் குறையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும்.

ரிஷப ராசி

மற்றவர்களிடம் நிதானமாக இருக்க வேண்டும். தேவையான நேரத்தில் அனைத்தும் கிடைக்கும். வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சுக்கிர பகவானால் உங்களுக்கு இது தன்னம்பிக்கை நிறைந்த காலமாக அமையப் போகின்றது. மன தைரியம் அதிகரிக்கும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுன ராசி

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சுக்கிர பகவானின் நகர்வு உங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது மனதில் மகிழ்ச்சியும், தைரியமும் அதிகரிக்கும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்