அந்தப்புரத்தில் பாண்டிய மன்னன்.. காத்திருந்த ராஜகுரு.. சாபத்தால் நீக்கிய மீனாட்சி சொக்கநாதர்
Meenakshi Chokkanathar: எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருள்மிகு.மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில்.
Meenakshi Chokkanathar: மன்னர்கள் ஆண்ட காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமான் தனக்கென மிக பெரிய பக்தர்கள் கூட்டம் வைத்து வருகிறார். உலகம் முழுவதும் கோயில் கொண்ட சிவபெருமான் பக்தர்களை ஆசீர்வாதம் செய்து வருகின்றார். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நமது நாட்டில் நடத்தப்பட்டு வருகின்றன.
சிவபெருமானுக்கு வழிபாடுகள் நடத்தப்படுவது போல் இந்த உலகத்தில் எங்குமே நடத்தப்படுவது கிடையாது. அந்த அளவிற்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்கிறார். மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே சிவபெருமானுக்கு மிகப்பெரிய கோயில்களை நமது நாட்டின் தெற்கு பகுதியில் மன்னர்கள் கட்டி வைத்துச் சென்றுள்ளனர்.
மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டுள்ளதாக புராணங்களில் கூறப்படுகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் அனைத்து மன்னர்களுக்கும் சிவபெருமான் குலதெய்வமாக விளங்கி வந்துள்ளார். போட்டி போட்டுக் கொண்டு மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை அனைத்து மன்னர்களும் கட்டிவைத்து சென்றனர்.
சில கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் வானுயர்ந்து அந்த கோயில்கள் இன்று வரை வரலாற்றின் சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகிறது. சில கோயில்களின் கட்டுமானங்களை கண்டு தற்போது இருக்கக்கூடிய ஆராய்ச்சியாளர்களும் வியந்து போகின்றனர்.
பாண்டியர்கள் மற்றும் சோழர்கள் இவர்கள் இருவரும் மிகப்பெரிய எதிரிகளாக இருந்து வந்துள்ளனர். இருப்பினும் சிவபெருமான் மீது கொண்ட அதீத பக்தி காரணமாக போட்டி போட்டு பிரம்மாண்ட கோயில்களை கட்டிச் சென்றுள்ளனர். மிகப்பெரிய சோழ மன்னன் ஆக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை வியப்பின் சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகிறது. மதுரையில் இருக்கக்கூடிய மீனாட்சி அம்மன் கோயிலும் மிகப்பெரிய வரலாற்று குறியீடாக திகழ்ந்து வருகின்றது.
பாண்டியர்கள் மற்றும் சோழர்கள் மட்டுமல்லாது பல்லவர்களும் சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளனர். மறுபுறம் அவர்களும் பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். அதுபோல எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருள்மிகு.மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சொக்கநாதரை எனவும் தாயார் மீனாட்சி என்ற திருநாமத்தில் அழைக்கப்பட்டு வருகின்றனர். கோயிலின் தல விருட்சமாக வில்வ மரம் விளங்கி வருகிறது. தீர்த்தமாக வில்வ வன தீர்த்தம் மற்றும் சூரிய புஷ்கரணி திகழ்ந்து வருகிறது.
இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் மீது ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் தேதி முதல் முப்பதாம் தேதி வரை சூரிய ஒளி படுவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் படித்துறையில் இருக்கக்கூடிய விநாயகர் ஜடாமுடியுடன் காட்சி கொடுத்து வருகிறார். இந்த கோயில் பாண்டியர்களால் கட்டப்பட்டது என கல்வெட்டுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு
இந்த பகுதியை மாறவர்ம சுந்தரபாண்டியன் என்பவர் ஆண்டு வந்துள்ளார். ஒரு முறை மகாராணியோடு பாண்டிய மன்னன் அந்தப்புரத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பாண்டிய மன்னனை காண்பதற்காக ராஜகுருவன பரஞ்சோதி முனிவர் அவசர அவசரமாக வந்துள்ளார்.
மன்னனை காண்பதற்காக அனுமதி கேட்டு அந்தப்புர வாயிலுக்கு வந்துள்ளார். வெகு நேரமாகியும் பாண்டிய மன்னன் வெளியே வரவில்லை. உடனே முனிவர் வாயில் காப்பானிடம் நீண்ட நேரம் நான் காத்திருந்த தகவலை மன்னனிடம் தெரிவித்து விடு என கூறிவிட்டு அவருடைய மணலூர் ஆசிரமத்திற்கு சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து பாண்டிய மன்னன் வெளியே வந்துள்ளார் ராஜகுரு காத்திருந்த தகவலை மன்னனிடம் வாயில் காப்பாளன் தெரிவித்துள்ளார். மிகுந்த வருத்தம் அடைந்த மன்னன் உடனே ராஜகுருவை சந்திப்பதற்காக ஆசிரமம் நோக்கி சென்றார். ராஜகுருவை சந்தித்த மன்னன் தனது தவறை பொறுத்துக் கொள்ளுமாறு அவரிடம் வேண்டிக் கொண்டார். மன்னனை ராஜகுரு மன்னித்தார்.
இருப்பினும் குருவை காக்க வைத்த காரணத்தினால் உனக்கு நீந்தித்த தோஷம் உண்டாகிற்று. இந்த சாபம் விலக வேண்டும் என்றால் தற்போது இருக்கக்கூடிய அருப்புக்கோட்டை இந்த பகுதியில் சிவபெருமானுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்ய வேண்டும் என ராஜகுரு கூறியுள்ளார். அதன்படி மாறவர்ம சுந்தரபாண்டியன் இந்த கோயிலை கட்டியுள்ளார்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.