HT Yatra: பசு மேய்க்கும் சிறுவனான விநாயகர்.. கோபமான ராவணன்.. பசுவண்ணனாக பெயர் கொடுத்த தேவர்கள்
HT Yatra: விநாயகர் பல்வேறு கோயில்களில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பசுவண்ணன் சித்தி விநாயகர் திருக்கோயில்.
தனக்கென மிகப் பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர் விநாயகர். ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் அனைத்து மக்களுக்குமான கடவுளாக விநாயகர் விளங்கி வருகின்றார். எளிதில் அனைவராலும் காணக்கூடிய மற்றும் வழிபாடு செய்யக்கூடிய கடவுளாக விநாயகர் திகழ்ந்து வருகின்றார்.
மரத்தடியில் அமர்ந்தும் காட்சி கொடுப்பார். மலை உச்சியில் அமர்ந்தும் காட்சி கொடுப்பார். முழு முதல் கடவுளாக விளங்கக்கூடிய விநாயகர் பெருமானை வழிபட்ட பிறகு அனைத்து கடவுளையும் வழிபாடு செய்ய வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது.
அப்படி முதல் கடவுளாக விளங்கக்கூடிய விநாயகர். பல்வேறு கோயில்களில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பசுவண்ணன் சித்தி விநாயகர் திருக்கோயில்.
தல பெருமை
ராவணனின் தாயார் கடலில் குளித்துவிட்டு அங்கு இருக்கக்கூடிய மணலில் லிங்கம் செய்து வழிபாடு செய்வது வழக்கம். ஒருமுறை கடல் அலை அந்த லிங்கத்தை உள்ளே இழுத்துச் சென்றது. இதனால் மன உளைச்சலில் அழுது கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த ராவணன் இது குறித்து கேட்டார். நடந்ததை கூறினார் ராவணனின் தாயார்.
இது நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் சிவபெருமானிடம் இருக்கக்கூடிய ஆத்ம லிங்கத்தை உங்களுக்காக பெற்றுத் தருகிறேன் என ராவணன் கூறினார். கைலாயம் நோக்கி இராவணன் புறப்பட்டார். தனது ஞான திருஷ்டியால் நாரதர் அனைத்தையும் அறிந்து கொண்டார்.
உடனே இந்திரனிடம் சென்று ஆத்ம லிங்கத்தை ராவணன் பெற்று விட்டால் நீங்கள் அவருக்கு அடிமையாக வேண்டியதுதான். உடனே இது குறித்து சிவபெருமானிடம் கூறுங்கள் என கூறினார் நாரதர். கைலாயத்தில் கடும் தவத்தை மேற்கொண்டார் ராவணன். தவத்தால் மயங்கிய சிவபெருமான் வரமாக கேட்டு ஆத்ம லிங்கத்தை ராவணனிடம் கொடுத்தார். மேலும் இதனை தெரியாமல் கூட கீழே வைத்து விடக்கூடாது இது பாதாள உலகத்திற்கு சென்று விடும் என சிவபெருமான் கூறியுள்ளார்.
தேவர்கள் சென்று சிவபெருமானிடம் கேட்கும் பொழுது அதனை நான் கொடுத்துவிட்டேன் என அவர் கூறினார். உடனே இந்த சிக்கலை விஷ்ணு பகவானிடம் தேவர்கள் கொண்டு சென்றனர். இதனை நான் நிவர்த்தி செய்கிறேன் என அவருக்கு கூறினார்.
ராவணன் இந்த ஆத்ம லிங்கத்தை எப்படியாவது கீழே வைத்து விட வேண்டும் என விஷ்ணு பகவான் ஒரு திட்டத்தை நிகழ்த்தினார். உடனே விநாயகரை அழைத்து ஒரு பிரம்மச்சாரி வேடத்தில் சென்று ராவணனோடு பயணம் செய்ய வேண்டும். அவர் சந்தியா வந்தனம் செய்வதற்காக லிங்கத்தை உன் கையில் கொடுப்பார். அதை நீ கீழே வைத்து விட வேண்டும் என விஷ்ணு பகவான் கூறியுள்ளார்.
பிரம்மச்சாரி வேடத்தில் சென்ற விநாயகர், ராவணனை பின்தொடர்ந்து சென்றார். விஷ்ணு பகவான் உடனே தனது சக்கரத்தை வைத்து சூரியனை மறைத்தார். நேரமாகிவிட்டது என சந்தியா வந்தனம் செய்வதற்காக ராவணன் கடற்கரை நோக்கி சென்றார்.
மடமைக்கும் சிறுவனாக அருகே இருந்த விநாயகரை அழைத்து இந்த ஆத்ம லிங்கத்தை கையில் வைத்திருக்க வேண்டும் நான் சந்தியா வந்தனம் செய்து விட்டு வந்து விடுகிறேன். எக்காரணம் கொண்டு இதை கீழே வைத்து விடக்கூடாது என கூறியுள்ளார்.
ஆத்ம லிங்கம் மிகவும் கனமாக இருப்பது போல தெரிகிறது. என்னால் எவ்வளவு நேரம் கையில் வைத்திருக்க முடியும் உங்களை மூன்று முறை நான் அழைப்பேன் நீங்கள் வரவில்லை என்றால் நான் கீழே வைத்து விடுவேன் என மாடு மேய்க்கும் சிறுவனாக இருக்கக்கூடிய விநாயகர் கூறியுள்ளார்.
சுமை தாங்க முடியாத விநாயகர் ராவணனை மூன்று முறை அழைத்துவிட்டு ஆத்ம லிங்கத்தை கீழே வைத்து விடுகிறார். உடனே சூரியனை மறைத்து வைத்திருந்த சக்கரத்தை தன்வசம் விஷ்ணு பகவான் இழுத்துக் கொண்டார். சூரியனில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு ஏதோ சூழ்ச்சி என ராவணன் கண்டுபிடித்து ஆத்ம லிங்கம் இருக்கும் இடத்தை நோக்கி ஓடுகிறார்.
அப்போது மாடு மேய்க்கும் சிறுவன் ஆத்ம லிங்கத்தை கீழே வைத்து விட்டதை கண்டு கோபம் கொள்கிறார். நான் உங்களை மூன்று முறை கூப்பிட்டு பார்த்தேன் நீங்கள் வரவில்லை சுமை தாங்க முடியாமல் கீழே வைத்து விட்டேன் என விநாயகர் ராவணனிடம் கூறுகிறார். கோபமடைந்த ராவணன் அந்த சிறுவனாக இருக்கக்கூடிய விநாயகரின் தலையில் குட்டு வைக்கிறார்.
பசுக்களை வைத்துக்கொண்டு சாமர்த்தியமாக தேவர்களை காப்பாற்றிய விநாயகருக்கு பசுவண்ணன் எனப் பெயர் வைத்து தேவர்கள் போற்றினார்கள். இந்த திருத்தலம் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. அதற்குப் பிறகு கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுக்கிரவார பேட்டையில் அமைந்துள்ளது.
தல வரலாறு
மைசூர் மன்னர் ஆட்சிக்காலத்தில் கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் அவர்களின் வசம் இருந்தது அப்போது இங்கு குடியேறிய மக்கள் தங்களது குலதெய்வமாக விளங்கி வந்த பசு அண்ணனுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்தனர். மைசூர் மன்னரின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு அந்த மக்கள் தங்களது தாயகம் நோக்கி சென்று விட்டனர். தற்போது அந்த தளத்தை தேவாங்க குல மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடியவர் தான் பசுவண்ணன் சித்தி விநாயகர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9