HT Yatra: நாகம் வழிபட்ட தலம்.. ராஜேந்திர சோழனின் குலதெய்வம்.. சோழர்களின் அனந்தீஸ்வரர் திருக்கோயில்
Temple: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் திருவனந்தீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் இருக்கக்கூடிய தீர்த்தம் சூரிய சந்திர புஷ்கரணி தீர்த்தமாகும். பார்வதி தேவி சௌந்தரநாயகியாக இங்கு காட்சி கொடுத்து வருகிறார்.
அரசர்கள் ஆண்டு வந்த காலத்தில் இருந்து இன்று வரை சிவபெருமானுக்கு தனி பக்தர்கள் கூட்டமே இருந்து வருகின்றன. உலகங்களும் கோயில் கொண்ட பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் சிவபெருமான். உருவமற்ற கடவுளாக லிங்க வடிவில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்த வருகிறார்.
கடலில் தொடங்கி மலையின் உச்சிவரை கோயில் கொண்டு அருள் பாலித்து வருகிறார் சிவபெருமான். மன்னர்கள் காலத்தில் உலகத்தையே ஆட நினைத்த பல மன்னர்களின் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். இன்று வரை வசிக்க முடியாத மிகப்பெரிய சரித்திர குறியீடாக மன்னர்கள் கட்டிய எத்தனை கோயில்கள் நமது கண்ணெதிரே இருந்து வருகின்றன.
அப்படி கட்டப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் திருவனந்தீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் இருக்கக்கூடிய தீர்த்தம் சூரிய சந்திர புஷ்கரணி தீர்த்தமாகும். பார்வதி தேவி சௌந்தரநாயகியாக இங்கு காட்சி கொடுத்து வருகிறார்.
தல சிறப்பு
அனந்தன் என்ற நாகம் பூஜை செய்ததற்கு ஆதாரமாக இந்த திருக்கோயில் உள்ள சோமஸ்கந்தரின் கையில் நாகம் இருக்கும். அது இந்த திருக்கோயிலில் மேலும் சிறப்பாகும்.
காலேஜர் பிரதோஷம் உள்ளவர்கள் இந்த திருக்கோயிலில் வந்து வழிபட்டால் தோஷம் விலகும் என கூறப்படுகிறது. மேலும் தீராத நோயால் அவதிப்படும் மக்கள் இந்த திருக்கோயிலில் வந்து சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட்டால் சுகமடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
வேண்டுதல் நிறைவேறியவர்கள் இந்த கோயிலுக்கு வந்து சுவாமிக்கும், அம்மனுக்கும் புது வஸ்திரம் அணிவித்து அபிஷேகங்கள் செய்து பூஜைகள் மூலம் தங்களது நேர்த்திக் கடனை செய்து கொள்கின்றனர்.
இந்த கோயிலில் வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு விதமான கல்வெட்டுகள் காணப்படுகின்றனர் குறிப்பாக கர்ப்ப கிரகத்தை சுற்றி ஆதித்த கரிகாலன் அதாவது ராஜராஜ சோழனின் அண்ணன் கொலை செய்யப்பட்ட வரலாறு குறித்து இந்த கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராஜராஜ சோழனின் பெரிய பாட்டியாக விளங்கி வந்த சோழப் பேரரசு செம்பியன் மாதேவி திருமணம் நடந்த தலம் இந்த அனந்தீஸ்வரர் திருக்கோயில் என கூறப்படுகிறது. அதன் காரணமாக அவர் நந்தா விளக்கு ஒன்று கொடையாக அளித்துள்ளார். இந்த விளக்குகளை ஏற்றுவதற்காக எண்ணெயை கொடுத்து வழிபட்டால் குலம் செழிக்கும் என அந்த காலத்தில் இருந்து நம்பப்பட்டு வருகிறது.
தல வரலாறு
சுந்தரபாண்டிய மன்னன் தொழுநோயால் மிகவும் கொடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்குப் பிறகு இந்த திருக்கோயிலுள்ள சூரிய சந்திர புஷ்கரணி திருத்தத்தில் நீராடி விட்டு அனந்தீஸ்வரரை வணங்கியுள்ளார். அதற்குப் பிறகு சுந்தரபாண்டிய மன்னன் குணமடைந்துள்ளார். தீராத நோயை தீர்க்கும் இறைவனாக இவர் விளங்கி வருகின்றார்.
எட்டு நாகங்களாக இருக்கும் அட்ட நாகங்களில் ஒருவராக அனந்தன் இருந்து வந்துள்ளார். தனக்கு ஏற்பட்ட தீராத குறையை தீர்ப்பதற்காக இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய இறைவனை வழிபட்டு வந்துள்ளார். அதற்குப் பிறகு அவருடைய குறைகள் அனைத்தும் நிவர்த்தி அடைந்துள்ளன.
அதனை பெருமைப்படுத்தும் விதமாகவே இந்த ஊருக்கு திருவந்தீஸ்வரம் என புராண பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பெயர்தான் தற்போது காட்டுமன்னார்கோயிலாக கூறப்படுகிறது. கங்கையை கொண்ட முதலாம் ராஜேந்திர சோழன் இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய அனந்தீஸ்வரரை குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ளார்.
அமைவிடம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் என்ற ஊரில் இந்த அருள்மிகு அனந்தீஸ்வரர் திருக்கோயில் வீற்றியிருக்கின்றது. இந்த கோவிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் மற்றும் வாகன வசதிகள் உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9