HT Yatra: குபேரன் பணக்காரனாக மாறிய தலம்.. பிரம்மதேவர் சாபம் நீங்கிய தலம்.. நிதீஸ்வரராக அமர்ந்து சிவபெருமான்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: குபேரன் பணக்காரனாக மாறிய தலம்.. பிரம்மதேவர் சாபம் நீங்கிய தலம்.. நிதீஸ்வரராக அமர்ந்து சிவபெருமான்

HT Yatra: குபேரன் பணக்காரனாக மாறிய தலம்.. பிரம்மதேவர் சாபம் நீங்கிய தலம்.. நிதீஸ்வரராக அமர்ந்து சிவபெருமான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 20, 2024 06:30 AM IST

HT Yatra: தமிழ்நாட்டில் கம்பீரமாக திகழ்ந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் விழுப்புரம் மாவட்டம் அன்னம்புத்தூர் அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோவிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் நிதீஸ்வரர் என பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றன.

குபேரன் பணக்காரனாக மாறிய தலம்.. பிரம்மதேவர் சாபம் நீங்கிய தலம்.. நிதீஸ்வரராக அமர்ந்து சிவபெருமான்
குபேரன் பணக்காரனாக மாறிய தலம்.. பிரம்மதேவர் சாபம் நீங்கிய தலம்.. நிதீஸ்வரராக அமர்ந்து சிவபெருமான்

மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் அனைவருக்கும் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். தங்களது கலைநயத்தை வெளிப்படுத்துவதற்காகவே சிவபெருமான் கோயில்களை மிகவும் பிரம்மாண்டமாக போட்டி போட்டுக் கொண்டு அனைத்து மன்னர்களும் கட்டி வழிபட்டு வந்துள்ளனர்.

இன்றுவரை காலத்தால் அழிக்க முடியாத மிகப்பெரிய கோயில்கள் கம்பீரமாக நின்று வருகின்றன. சோழர்களின் மிகப்பெரிய ராஜனாக விளங்கு ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் வித்தியாசமான கலை நுட்பத்தோடு கட்டப்பட்டு இன்றுவரை கம்பீரமாக நின்று வருகிறது.

இதுபோன்று எத்தனையோ கோயில்கள் தமிழ்நாட்டில் கம்பீரமாக திகழ்ந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் விழுப்புரம் மாவட்டம் அன்னம்புத்தூர் அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோவிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் நிதீஸ்வரர் எனவும் தாயார் கனக திரிபுரசுந்தரி எனவும் திருநாமம் கொண்டு பக்தர்களுக்கு அருள் வாழ்த்து வருகின்றன.

தல பெருமை

தனக்கு நிதி வேண்டுமென பல கோயில்களுக்கு சென்று குபேரன் வழிபாடு செய்தார். அப்படி குபேரன் சென்ற கோயில்களில் இதுவும் ஒன்று. பல கோயில்களை கட்டி வழிபாடு செய்த மிகப்பெரிய சோழனாக விளங்கிய ராஜராஜ சோழன் வியந்து பார்த்த கோயில்களில் இதுவும் ஒன்று இந்த கோயிலுக்கு தேவையானதை கொடுத்து அவர் வழிபட்டுள்ளார் என கூறப்படுகிறது.

18 ஆம் ஆண்டு தன்னுடைய ஆட்சியில் இந்த திருக்கோவிலுக்கு வந்து ராஜராஜசோழன் திருப்பணிகள் செய்து வழிபட்டுள்ளார். மேலும் இந்த கோயிலை புனரமைப்பு செய்துள்ளார். கோயிலுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்துள்ளார். இங்கேயே தங்கி இருந்து இந்த சிவபெருமானை ராஜராஜ சோழன் வழிபட்டுள்ளார். என கல்வெட்டுகளில் கூறப்படுகின்றது.

மயிரும் ஆண்டுகள் கடந்து இந்த கோயில் இன்று வரை பிரம்மாண்டமாக திகழ்ந்து வருகிறது. பல்லவர் காலத்திலும் இந்த கோயிலுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த கோயிலில் இருக்கக்கூடிய விநாயகரின் விக்ரகம் பல்லவர் காலத்தில் செதுக்கப்பட்ட சிற்பமாக இருக்கின்றது என தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன.

இந்த கோயிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டால் பூர்வ ஜென்மங்களின் பாவங்கள் நீங்கி உங்கள் விதி புதிதாக எழுதி மாற்றி அமைக்கப்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

தல வரலாறு

அனைவருடைய தலையெழுத்தையும் நிர்ணயத்தை எழுதக்கூடிய பிரம்மனின் தலையெழுத்தை சிவபெருமான் திருத்தி எழுதிய கோயிலாக இந்த கோயில் விளங்கி வருகிறது. அதனால் இந்த கோயிலில் வழிபட்டால் சிவபெருமான் மற்றும் பிரம்மதேவர் இவர்கள் இருவரும் நமது தலையெழுத்தை மாற்றி எழுதுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஒருமுறை விஷ்ணு பகவான் மற்றும் பிரம்ம தேவர் இருவருக்கும் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இது குறித்து சிவபெருமானிடம் கேட்ட பொழுது எனது அடி முடி இரண்டையும் யார் காண்கிறார்களோ அவர்களே பெரியவர் என சிவபெருமான் கூறினார். வராக அவதாரம் எடுத்து விஷ்ணு பகவான் அடியை தேடிச் சென்றார் ஆனால் எதையும் காணவில்லை எனக் கூறி சிவபெருமானிடம் வந்து நின்றார். அன்னப்பறவையாய் உருவம் எடுத்து சென்ற பிரம்மதேவர் முடியை கண்டதாக கூறி பொய் கூறினார்.

இதனால் கோபமடைந்த சிவபெருமான் அன்னமாகும் படி சபித்தார். இதனால் வருத்தம் அடைந்த பிரம்ம தேவர் இந்த தளத்திற்கு வந்து பொய்கை ஒன்றை உருவாக்கி அதன் நீரால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து பல ஆண்டுகள் வழிபாடு செய்துள்ளார். அதன் பின்னர் சாபம் நீங்கி படைப்பு தொழிலை செய்ய தொடங்கினார் பிரம்ம தேவர்.

இதன் காரணமாகவே இந்த ஊருக்கு அன்னம்புத்தூர் என பேரிடப்பட்டது. இந்த திருக்கோயிலில் குபேரன் வழிபட்டு நீங்காத செல்வத்தை பெற்றுக் கொண்ட காரணத்தினால் இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் நிதீஸ்வரர் என திருநாமம் கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner