Pournami: ஆஷாட பெளர்ணமி எப்போது ஜூலை 20 அல்லது ஜூலை 21?: சரியான தேதி, குளிக்கும் நேரம் மற்றும் வழிபாட்டு முறையை அறிவோம்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Pournami: ஆஷாட பெளர்ணமி எப்போது ஜூலை 20 அல்லது ஜூலை 21?: சரியான தேதி, குளிக்கும் நேரம் மற்றும் வழிபாட்டு முறையை அறிவோம்

Pournami: ஆஷாட பெளர்ணமி எப்போது ஜூலை 20 அல்லது ஜூலை 21?: சரியான தேதி, குளிக்கும் நேரம் மற்றும் வழிபாட்டு முறையை அறிவோம்

Marimuthu M HT Tamil
Jul 20, 2024 02:48 PM IST

Pournami: ஆஷாட பெளர்ணமி எப்போது ஜூலை 20 அல்லது ஜூலை 21. ஆஷாட பெளர்ணமியில் சரியான தேதி, குளிக்கும் நேரம் மற்றும் வழிபாட்டு முறையை அறிவோம்.

Pournami: ஆஷாட பெளர்ணமி எப்போது ஜூலை 20 அல்லது ஜூலை 21?: சரியான தேதி, குளிக்கும் நேரம் மற்றும் வழிபாட்டு முறையை அறிவோம்
Pournami: ஆஷாட பெளர்ணமி எப்போது ஜூலை 20 அல்லது ஜூலை 21?: சரியான தேதி, குளிக்கும் நேரம் மற்றும் வழிபாட்டு முறையை அறிவோம்

ஆஷாட பெளர்ணமி:

இந்த நாளில் கங்கை நதியோ அல்லது, நம் ஊரில் செல்லும் நதியிலோ அல்லது புனித நதியிலோ குளிப்பது ஒருவரை அனைத்து பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறது என்று நம்பப்படுகிறது. ஆஷாட பூர்ணிமா, குரு பூர்ணிமா அல்லது ஆஷாட பெளர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது. 

மேலும், இந்த நாளில் குருக்கள், சீடர்களால் வணங்கப்படுகிறார்கள். அது சீடர்களுக்கு நல்ல பலன்களைத் தரும் என்பது ஐதீகம். ஆஷாட பூர்ணிமா நாளில், தொண்டு பணிகளும் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகின்றது. பஞ்சாங்கத்தின்படி, இந்த ஆண்டு ஆஷாட பூர்ணிமா ஜூலை 21, 2024 ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. ஆஷாட பூர்ணிமா அல்லது ஆஷாட பெளர்ணமி அல்லது ஆடி பெளர்ணமியின் சரியான தேதி, குளியல் செய்யும் நேரம் மற்றும் வழிபாட்டு முறை ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்வோம். 

ஆஷாட பூர்ணிமா எப்போது?

பஞ்சாங்கத்தின் படி, ஆஷாட மாதத்தின் முழு நிலவு தேதியானது ஜூலை 20 அன்று மாலை 5:59 மணிக்குத் தொடங்கி, மறுநாள் அதாவது ஜூலை 21அன்று மாலை 03:46 மணிக்கு முடிவடைகிறது. எனவே, உதயதிதி படி, ஆஷாட பூர்ணிமா ஜூலை 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 

நீராடுதல்: ஆஷாட பூர்ணிமா நாளில், பிரம்ம முகூர்த்தத்தில் நீராடும் பணிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த நாளில், பிரம்மமுகூர்த்தம் காலை 04.14 மணிக்குத் தொடங்கி மாலை 04.55 மணிக்கு முடிவடையும். எனவே, இந்த நேரத்தில் குளிப்பது நன்மைகள் தரும். 

சர்வார்த்த சித்தி யோகம்: ஆஷாட பௌர்ணமியன்று சர்வார்த்த சித்தி யோகமும் உருவாகும். சர்வர்த்த சித்தி யோகம் ஜூலை 21 காலை 05:37 மணி முதல் ஜூலை 22 அதிகாலை 12:14 மணி வரை உருவாக்கப்படும்.

ஆஷாட பூர்ணிமா வழிபாடு:

ஆஷாட பூர்ணிமா அன்று அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். முடிந்தால், பிரம்ம முகூர்த்தத்தின்போது கங்கை நதி அல்லது நதிக்கரைகளில் குளிக்கலாம். கங்கை நீரையோ அல்லது நதிக்கரையில் இருந்து எடுத்துவந்த நீரையோ வீட்டிற்கு எடுத்துவந்துகூட பிற நீரில் கலந்து குளிக்கலாம். இதற்குப் பிறகு, சூரியதேவனுக்கு தண்ணீர் வழங்கி வழிபடுங்கள். அதன்பின், விஷ்ணுவை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.

ஆஷாட பூர்ணிமாவில் விஷ்ணு பகவானுக்கு மஞ்சள் நிறப் பழங்கள், மஞ்சள் நிறப்பூக்கள், ஊதுபத்தி, நைவேத்யம் ஆகியவற்றை வழங்கி வழிபடுங்கள். 

'ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ' என்ற விஷ்ணுவின் பீஜ மந்திரத்தை உச்சரித்தும் வழிபடலாம். இறுதியாக, விஷ்ணு மற்றும் அன்னை லட்சுமியுடன் சேர்ந்து அனைத்து கடவுள்களுக்கும் தேவியர்களுக்கும் ஆரத்தி எடுங்கள். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்