Weekly Love RasiPalan: செப்.9 முதல் செப்.17 வரை காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கு காதல் ராசிபலன்கள்!-weekly love rasipalan or weekly love horoscope for 12 zodiac sign sep 9th to sep 17 in 2024 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Weekly Love Rasipalan: செப்.9 முதல் செப்.17 வரை காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கு காதல் ராசிபலன்கள்!

Weekly Love RasiPalan: செப்.9 முதல் செப்.17 வரை காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கு காதல் ராசிபலன்கள்!

Marimuthu M HT Tamil
Sep 09, 2024 04:15 PM IST

Weekly Love RasiPalan: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை வரை காதல் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது, எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

Weekly Love RasiPalan: செப்.9 முதல் செப்.17 வரை காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கு காதல் ராசிபலன்கள்!
Weekly Love RasiPalan: செப்.9 முதல் செப்.17 வரை காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கு காதல் ராசிபலன்கள்!

ரிஷபம்: ரிஷப ராசியினர் காதல் மற்றும் ரிலேஷன்ஷிப் விவகாரங்களில் அதிகம் உணர்ச்சிவசப்படாமல் கவனமாக இருங்கள். வீட்டில் செய்ய வேண்டிய மற்ற விஷயங்களை மறந்துவிடாதீர்கள். ஒரு நல்ல வார்த்தை, சில நிமிட கவனம் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும். வாரத்தின் நடுப்பகுதியில், ஒரு குடும்ப உறுப்பினர் உங்களுக்கு ஆலோசனை வழங்குவார். இது உங்கள் காதல் மற்றும் தாம்பத்திய வாழ்க்கையில் சுமுகத்தைத் தரும். வார இறுதியில், நீங்கள் குற்ற உணர்ச்சி இல்லாமல் காதல் அந்நியோன்யத்தை அனுபவிக்க முடியும். உங்கள் இல்வாழ்க்கைத்துணையை கவனித்துக்கொள்ளுங்கள். ஆனால், உங்கள் குடும்பத்தைப் பற்றி மறந்துவிடாதீர்கள்.

மிதுனம்:

தாம்பத்திய உறவில் இருக்கும் மிதுன ராசியினருக்கு ரிலேஷன்ஷிப் இந்த வாரம் சுமூகமாக இல்லை. ஆனால், இந்த வாரம், பெரிய விஷயங்களை செய்யும்போது, சின்னஞ்சிறு விசயங்களை மறந்துவிடுவீர்கள். அதை கவனமாகப் பார்க்கவும். யாரையும் புறக்கணிக்காதீர்கள். உங்களது குறையை சரிசெய்ய முயற்சிக்க ஏற்ற வாரம் இது. திருமணமாகதவர்களுக்கு, திருமணம் நடக்கலாம்.

கடகம்:

வாரத்தின் தொடக்க நாட்களில் கடக ராசியினரின் காதல் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்காது. ஆனால், வாரம் முன்னேறும்போது, காதல் வாழ்க்கை சிறப்பாக மாறும்.வாரத்தின் முதல் நாட்கள் குழப்பம் மற்றும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகளைக் கேள்விக்குள்ளாக்குவதற்கான நேரமாக இருக்கலாம். ஆனால் வார இறுதியில், நெருங்கும்போது, கடக ராசியினருக்கு நட்சத்திரங்கள் மிகவும் மங்களகரமானதாக மாறும்.

சிம்மம்:

இந்த வாரம் சிம்ம ராசியினருக்கு உணர்வுத்தூண்டுதல்கள் அதிகமாக இருக்கும். அது உங்களை எளிதில் கோபப்படுத்தும். அத்தகைய உணர்ச்சிகரமான சூழ்நிலையை சரியாக நிர்வகிப்பது சிம்ம ராசியினருக்கு முக்கியம். சிங்கிளாக இருக்கக் கூடிய நபர்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும். ஏனெனில், பின்னர் வருத்தப்படும் எதையும் சொல்லவோ அல்லது செய்யவோ கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் சாதாரண அன்பைத் தேட முயற்சிப்பீர்கள். நீங்கள் சில செயலுக்காக காத்திருந்தாலும், வாழ்க்கையின் சிறிய விஷயங்களில்கூட அன்பு மலர வாய்ப்புள்ளது. புதனின் செல்வாக்கின்கீழ் இருப்பது, வாழ்க்கையில் மிகவும் எளிமையான விஷயங்களில் கலையைக் கண்டறிய உதவுகிறது. தம்பதிகள் ஒரு நீண்டகால கூட்டாண்மையின் ஆழத்தை உணரும் நேரம் இது.

துலாம்:

இந்த வாரம் துலாம் ராசியினருக்கு நல்லிணக்கமும் சமநிலையும் காதல் வாழ்க்கையில் சில உணர்வைப் பெற உதவும். அன்பின் கிரகமான சுக்கிரன், வியாழன் மீது நேர்மறையான விளைவைக் கொண்டுள்ளது. இது இல்வாழ்க்கைத்துணையை மன்னிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் உதவும். சமீபத்தில் தம்பதியினர் இடையே ஏதேனும் சர்ச்சைகள் இருந்தால், நீங்களும் உங்கள் இல்வாழ்க்கைத்துணையும் மனம்விட்டுப் பேசி பிரச்னையைச் சரிசெய்வீர்கள்.

விருச்சிகம்:

இந்த வாரம் நீங்களும் உங்கள் துணையும் ஒருவருக்கொருவர் ஒருவர் நல்ல புரிதலுடன் இருப்பீர்கள். ஒருவருக்கொருவர் எளிதாக புரிந்து கொள்ள முடியும். சாதாரண நடவடிக்கைகள் மிகவும் சிறப்பானதாக மாறும். இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து செய்யவேண்டியதைச் செய்யுங்கள். நீங்கள் வீட்டில் இருந்தாலும் அல்லது வெளியே சென்றாலும், ஒன்றாக செலவழித்த நேரத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

தனுசு:

இந்த வாரம் உங்கள் இதயம் எப்போதும் உங்களை ஆதரிக்கும் ஒருவருடன் இருக்க விரும்புகிறது. ஆனால், நீங்கள் உறவில் இருந்து பிரிந்து இருப்பீர்கள் என்று நட்சத்திரங்கள் உங்களுக்குச் சொல்கின்றன. காதலில் இருகும் தனுசு ராசியினருக்கு அன்பும் ஆறுதலும் எவ்வளவு தேவைப்படுகிறதோ, அதே அளவுக்கு அவர்கள் வலிமையானவர்களாகவும், தனித்து நிற்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.

மகரம்:

இந்த வாரம் மகர ராசியினர், காதல் விஷயங்களில் மற்றவர்களின் உள்ளீடுகளின் மதிப்பைப் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் கடினமான உணர்வுகளை அனுபவிக்கலாம். உங்கள் நெருங்கிய நண்பர்களிடம் பேசுவதற்கு தாமதிக்க வேண்டாம். அவை உங்கள் உணர்ச்சிகளைச் சமாளிக்க உங்களுக்கு உதவக்கூடும். மேலும் பல அனுபவங்களையும் உங்களுக்கு வழங்கக்கூடும். தீவிரமான உரையாடல்களை மேற்கொள்ளுங்கள்.

கும்பம்:

இந்த வாரம் கும்ப ராசியினருக்கு சில ஆச்சரியமான காதல் வாய்ப்புகளைத் திறக்கும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், எதையும் கண்டுகொள்ளாமல் இருக்காதீர்கள். ஏனெனில் ஒரு குடும்ப உறுப்பினர் உங்களை ஒரு காதல் எண்ணம்கொண்ட நபருக்கு அறிமுகப்படுத்தலாம். அந்த நபரை நீங்களே தெரிந்துகொள்ள நேரம் ஒதுக்குங்கள்.

மீனம்:

மீன ராசியினர் இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கையில் சில எழுச்சிகளைக் காணலாம். உறவினர் ஒருவர் சண்டையைத் தூண்டும் விதத்தில் நடந்துகொள்ளலாம். நீங்கள் கோபத்துடன் செயல்படலாம். தூண்டுதலில் செயல்பட வேண்டாம். ஆனால் அதைக் கையாளும்போது அமைதியாக இருங்கள். வார இறுதியில், மீன ராசியினர் காதல் உறவில் நேர்மறையான மனநிலையில் இருப்பீர்கள்.

கணித்தவர்: ஜோதிடர் நீரஜ் தன்கேர்

 

Whats_app_banner