தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Veedu Vangum Yogam: ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வாங்கும் யோகம் யாருக்கு இருக்கு?

Veedu vangum yogam: ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வாங்கும் யோகம் யாருக்கு இருக்கு?

Manigandan K T HT Tamil
May 10, 2024 04:18 PM IST

Veedu vangum yogam: சிம்ம லக்கினத்தைப் பொறுத்தவரை செவ்வாயும், சுக்ரனும் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு வீட்டுக்கு மேல் வாங்க வாய்ப்புள்ளது. மகரம், கும்பம் லக்கின ஜாதகக்காரர்களுக்கும் சொத்து சேர்க்கும் வாய்ப்பு இருக்கிறது.

Veedu vangum yogam: ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வாங்கும் யோகம் யாருக்கு இருக்கு?
Veedu vangum yogam: ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வாங்கும் யோகம் யாருக்கு இருக்கு? (pixabay)

ஒரு சிலருக்கோ ஒரு சொந்த வீடு இருந்தாலும், அடுத்த வீடு கட்டும் யோகம் உடனே வரும். கடைகளை கட்டி வாடகைக்கு விடுவார்கள். கல்யாண மண்டபம் கட்டி வாடகைக்கு விடுவார்கள். காலி மனைகள் வாங்கிப் போடுவார்கள். இப்படி ஒரு சிலருக்கு யோகம் இருப்பது உண்டு.

லட்சக்கணக்கில் வாடகை மூலமாக சம்பாதிப்பவர்கள் நிறைய பேர் உண்டு. அப்படி ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வாங்கும் யோகம் ஜோதிட சாஸ்திரத்தின்படி யாருக்கு இருக்கிறது என பார்ப்போம்.

நாம் எந்த லக்கினத்தில் பிறந்திருந்தாலும், 4ம் அதிபதியும் 10ம் அதிபதியும் நல்ல நிலையில், இணைந்திருந்தால், அவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் கிடைக்கும். இந்த நல்ல நிலை என்பது இந்த இருவரில் யாராவது ஒருவர் ஆட்சி பெற்ற நிலையில், உச்சம் பெற்ற நிலையில் இருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு மேஷ லக்கினத்தில் 4ம் அதிபதியும் 10ம் அதிபதியும் யாரெனப் பார்த்தால் சனியும், சந்திரனும் ஆவர்.

சந்திரனுடைய வீடான கடகத்திற்கு சனி வந்தால் பகையாகிவிடும். சனியோட வீடாகிய மகரத்திற்கு கும்பத்திற்கோ சந்திரன் வந்தால் அவர் வலுவிழப்பார். ரிஷபத்தில் இருந்தால் இருவருமே சிறப்பாக இருப்பார்கள். துலாமில் இணைந்திருந்தால் சந்திரன் பெரிதாக பாதித்திருக்க மாட்டார்.

இதில் 4ம் அதிபதியாக சூரியனும் 10ம் அதிபதியாக சனியும் வருவார்கள். எதாவது சுப கோள்கள் தொடர்பு கொள்ளும் இது இன்னும் இதன் சக்தி அதிகமாகும்.

மிதுன லக்கினத்தை எடுத்துக் கொண்டால் 4ம் அதிபதியாக புதனும் 10ம் அதிபதியாக குருவும் வருவார்கள். இருவருமே பகையாக இருப்பார்கள்.

இவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீடு, வாசல் அமையும் யோகம் உண்டு. இவர்களில் சிலருக்கு வீடு வாங்கினால், அதை விற்பனை செய்துவிட்டு கடனாகக் கூடிய நிலையும் ஏற்படக் கூடும். கடக லக்கினத்தைப் பொறுத்தவரை 4ம் அதிபதியாக சுக்ரனும் 10ம் அதிபதியாக செவ்வாயும் வந்துவிடுவார்கள்.

இவர்கள் நேரடியாக வலுப்பெறுகிறார்கள். சொத்துக்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

சிம்ம லக்கினத்தைப் பொறுத்தவரை செவ்வாயும், சுக்ரனும் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு வீட்டுக்கு மேல் வாங்க வாய்ப்புள்ளது.

இந்த லக்கினக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம்

மகரம், கும்பம் லக்கின ஜாதகக்காரர்களுக்கும் சொத்து சேர்க்கும் வாய்ப்பு இருக்கிறது. சர லக்கினத்தில் கடகமும் மகரமும், ஸ்திர லக்கினத்தில் சிம்மமும் கும்பமும் அதிகப்படியான சொத்துகளை சேர்க்கும் வாய்ப்புகளை இயற்கையாகவே பெற்றவர்கள் ஆவர். இந்த நான்கு லக்கினக்காரர்கள், கட்டடம் சம்பந்தப்பட்ட, ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட, வீடு மனை வாங்கி, விற்கும் தொழிலில் ஈடுபட்டால் மற்றவர்களை விட அதிக சொத்துக்களை சேர்க்க முடியும்.

கன்னி லக்கினத்திற்கு 4ம் அதிபதியாக குருவும் 10ம் அதிபதியாக புதன் வருவார். இவர்களுக்கு இந்த அதிபதிகள் லக்கினத்தில் இருந்தால் திக் பலம் கிடைக்கும். நிச்சயம் ஒரு வீட்டுக்கு மேல் வாங்கும் யோகம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்