வாஸ்து குறிப்புகள்.. வீட்டில் மயில் இறகுகளை எந்த திசையில் வைப்பதால் என்ன பயன்? பிரதான கதவு அமைவிட வாஸ்து!
வாஸ்து குறிப்புகள்.. வீட்டில் மயில் இறகுகளை எந்த திசையில் வைப்பதால் என்ன பயன்? பிரதான கதவு அமைவிட வாஸ்து குறித்துப் பார்ப்போம்.
இந்து மதத்தில், மயில் இறகுகள் கடவுளுக்குப் பிரியமானவைகளாகக் கருதப்படுகின்றன. லட்சுமி தேவி, விநாயகர், முருகன், இந்திரன் ஆகியோர் மயில் இறகுகளை ஏதேனும் ஒரு வடிவத்தில் விரும்புகிறார்கள் என்று நம்பப்படுகிறது.
மயில் இறகுகள் வீட்டின் அழகை மேம்படுத்துகின்றன மற்றும் எதிர்மறை ஆற்றலை வெளியேற்றுகின்றன.
வீட்டில் மகிழ்ச்சிக்கு, வாஸ்து விதிகளின்படி மயில் இறகுகளைப் பயன்படுத்துவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆனால், பல நேரங்களில் மக்கள் லாபத்திற்காக மயில்களை துன்புறுத்தக் கூடாது.
அதற்குப் பதில், மயில் நடனமாடும்போதும், பறந்து பறந்து எங்காவது உட்காரும்போதும் சிறகுகள் தானாகவே உடைந்து கீழே விழும். இதுபோன்ற மயில் இறகுகளை எடுத்து வீட்டில் வைக்கலாம். வீட்டின் எதிர்மறையைப் போக்க மயில் இறகு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்துப் பார்ப்போம்.
மயில் இறகுகளைப் பயன்படுத்துவதற்கான வாஸ்து குறிப்புகள்:
வாஸ்துபடி, வாஸ்து குறைபாடுகளிலிருந்து விடுபட தென்கிழக்கு கோணத்தில் மயில் இறகுகளை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
ராகுவின் கோபத்தைத் தவிர்க்க, நீங்கள் வீட்டின் கிழக்கு அல்லது வடகிழக்கு சுவரில் மயில் இறகுகளை வைக்கலாம். இந்த திசையில் மயில் இறகுகளை வைப்பதன் மூலம், செல்வ ஆதாயங்கள் அதிகமாக கிடைப்பதாக நம்பப்படுகிறது.
வாஸ்துவின் கூற்றுப்படி, வீட்டின் தெற்குத்திசையில் அமைந்துள்ள பெட்டகத்தில் மயில் இறகுகளை வைப்பது, நிதிச் சிக்கல்களை விலக்கி வைக்கிறது மற்றும் பணத்திற்குப் பஞ்சமில்லாமல் இருக்க உதவுகிறது.
திருமண வாழ்க்கையின் சிக்கல்களைச் சமாளிக்க படுக்கையறையில் மயில் இறகுகளை வைக்கலாம். இது காதல் உறவுகளுக்கு இனிமையைத் தருகிறது என்று நம்பப்படுகிறது. படுக்கையறையின் தென்மேற்குத் திசையில், மயில் இறகுகளை வைக்க வேண்டும்.
இந்து மத நம்பிக்கைகளின்படி, புத்தகத்தின் நடுவில் மயில் இறகுகளை வைப்பது சரஸ்வதி தேவியின் ஆசீர்வாதத்தைப் படிக்கும் மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்கிறது.
வாஸ்து விதிகளின்படி, உடைந்த பொருட்களுடன் மயில் இறகுகளை வைக்கக்கூடாது. இது மயில் இறகின் நேர்மறை ஆற்றலை நீக்கி, எதிர்மறை ஆற்றலை உருவாக்குகிறது.
பிரதான கதவு தொடர்பான வாஸ்து குறிப்புகள்:
வாஸ்துபடி, பிரதான நுழைவாயிலின் முன் ஸ்டோர் ரூம், வாட்ச்மேன் கேபின் அல்லது குப்பைத்தொட்டி போன்றவை இருக்கக்கூடாது.
பிரதான நுழைவுவாயிலுக்கு முன்னால் ஒரு பெரிய தூண் இருப்பது நல்லதாகக் கருதப்படவில்லை. இது வீட்டில் பிரச்னைகளை உண்டாக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வணிக கூட்டாளிகளின் கருத்துக்கள் எதுவும் வெற்றிபெறாது. இதனால் முன்னேற்றப் பாதையில் தடைகள் ஏற்படலாம்.
பிரதான நுழைவு வாயில் முன்பு செப்டிக் டேங்க், போரிங் போன்றவை இருக்கக்கூடாது. இதன் காரணமாக குறித்த நபர் நிதி பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஸ்துபடி, பிரதான வாயிலின் பிரதான கேட்டை திறக்கும் போதும் மூடும்போதும் சத்தம் கேட்கக்கூடாது. இத்தகைய ஒலிகள் குடும்ப வாழ்க்கையில் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
வாஸ்துபடி வீட்டின் நீளம் மற்றும் அகலத்தின் நடுவில் பிரதான கதவு சரியாக அமையக்கூடாது. அது வீட்டின் ஒரே பக்கத்தில் இருக்கவேண்டும்.
வாஸ்துவில், பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் எங்கிருந்தோ அல்லது பிற இடங்களிலிருந்தோ தண்ணீர் சொட்டுவது நல்ல அறிகுறியாகக் கருதப்படுவதில்லை.
வாஸ்துவில் இரண்டு வீடுகளுக்கு, ஒரே பிரதான நுழைவாயில் இருப்பது மங்களகரமானதாகக் கருதப்படவில்லை.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்