தமிழ் செய்திகள்  /  Astrology  /  Vastu Tips Of Peacock Feather And Know Which Direction It Can Be Kept For Wealth And Luck

Vastu Tips: தோஷங்களை நீக்கும் மயில் இறகுகள்..! வீட்டில் எந்த திசையில் வைத்தால் நன்மை, அதிர்ஷ்டம் கிடைக்கும்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 13, 2024 05:42 PM IST

பல்வேறு தோஷங்களை போக்கும் வல்லமை கொண்டிருக்கும் மயில் இறகுகளை வீட்டில் எந்த திசையில் வைத்தால் அதிர்ஷ்டம், நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி வாஸ்து நிபுணர்கள் கூறுவதை பார்க்கலாம்

மயில் இறகு வாஸ்து டிப்ஸ்
மயில் இறகு வாஸ்து டிப்ஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

வண்ணமயமான இருக்கும் மயில் இறகை வீட்டின் எந்த மூலையிலும் வைக்கலாம். இதனால் பல்வேறு விதமான வாஸ்து பலனை பெறலாம் என்கிறார்கள். இந்த இறகு அதன் அழகியலில் மட்டுமல்ல, அவை இருக்கும் சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் தன்மையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்திலும் அதன் சில குணாதிசயங்களை குறிப்பிடப்பட்டுள்ளது

உங்கள் வீட்டில் மயில் இறகுகளை ஏன் வைக்க வேண்டும்?

வீட்டில் மயில் தோகை அல்லது இறகு வைத்திருந்தால், எதிர்மறை சக்திகள் வெளியேறும். வாஸ்து தோஷம் இருந்தாலும் அதற்கான பரிகாரம் கிடைக்கும். அதுமட்டுமின்றி வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் பெருகும் என கூறப்படுகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, மயில் இறகு வீட்டில் இருக்கும் பல்வேறு தொந்தரவுகளை நீக்க உதவுகிறது. இது அனைவரின் மனதிலும் நேர்மறையாக சிந்திக்க உதவுகிறது. மயில் இறகுகள் குழந்தைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. குழந்தைகளின் மனதிலும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது.

குழந்தைகள் படிக்கும் அறையில் மயில் இறகுகளை வைப்பதன் மூலம் அவர் படிப்பில் கவனம் செலுத்த உதவுகிறது. மயில் இறகுகள் ஒருவரது உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை குறைக்க உதவுகின்றன. கணவன்-மனைவி இடையே நல்லுறவைப் பேணுவதிலும் மயில் இறகு முக்கிய பங்கு வகிக்கிறது.

மயில் இறகை உங்களின் பணப்பெட்டியில் வைப்பதன் மூலம் அதிர்ஷ்டம், பணமும் கிடைக்கலாம் என கூறப்படுகிறது. பணம் வைக்கும் இடங்களில் கருநீல நிறம் கொண்ட துணியை விரித்து, அதன் மேல் மயில் இறகு ஒன்றை வைத்து, சேமித்து வரலாம். இப்படி செய்யும் பட்சத்தில் உங்களது பணம் வீண் விரயம் ஆகாமல் சேமிப்பு அதிகரிக்கும்.

தோஷங்களை நீக்கும் மயில் இறகுகள்

ஒன்பது மயில் இறகை எடுத்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து, வழிபட்டால் சனியால் உண்டாகும் தோஷங்கள் அனைத்துமே நீங்கிவிடும். மூன்று மயிலிறகை ஒன்றாக வைத்து முருகப் பெருமானையும் உங்களது குலதெய்வத்தையும் வேண்டிக் கொண்டு பூஜை அறையில் வைத்து வழிபட்டால், நீங்கள் செய்த பாவத்துக்கு விமோசனம் கிடைக்கும்.

வீட்டில் ஆங்காங்கே அழுகுக்காக மயில் இறகை வைத்தாலும் எந்தவொரு கெட்ட சக்தியும், கெட்ட தோஷமும், கண் திருஷ்டியும் தாக்காது என கூறப்படுகிறது.

மயில் இறகை வைக்க வேண்டிய, வைக்க கூடாத இடங்கள்

வாஸ்து படி வீட்டின் வடக்கு திசையில் மயில் இறகு வைப்பது மிகவும் நல்லது. வடக்கில் வைப்பது நிதி முன்னேற்றத்துடன் வெற்றியையும் ஈர்க்கிறது.

அதேபோல் வீட்டின் மேற்கு திசையில் ஒருபோதும் மயில் இறகை வைக்கக்கூடாது. இது எதிர்மறை ஆற்றல் மற்றும் வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இவ்வாறு செய்வதால் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்