Vastu Tips for Money: உங்கள் வீட்டில் பணம் கொட்ட வேண்டுமா? கையில் பணம் தங்க வேண்டுமா? டாப் 10 வாஸ்து டிப்ஸ்கள் இதோ!-vastu tips for money how to increase positive energy and prosperity in your home with vastu and goddess lakshmi - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vastu Tips For Money: உங்கள் வீட்டில் பணம் கொட்ட வேண்டுமா? கையில் பணம் தங்க வேண்டுமா? டாப் 10 வாஸ்து டிப்ஸ்கள் இதோ!

Vastu Tips for Money: உங்கள் வீட்டில் பணம் கொட்ட வேண்டுமா? கையில் பணம் தங்க வேண்டுமா? டாப் 10 வாஸ்து டிப்ஸ்கள் இதோ!

Kathiravan V HT Tamil
Sep 23, 2024 04:44 PM IST

Vastu Tips for Money: ஒரு நபர் நன்றாக சம்பாதித்தாலும் வந்த பணம் கையில் நிற்கவில்லை என்பதே பலரது கவலைகளாக உள்ளது. பணத் தட்டுப்பாட்டால் போராடுபவர்களுக்கு வாஸ்து தோஷத்தில் சில பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளது.

vastu tips for financial stability
vastu tips for financial stability

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை நோக்கம், மனிதர்களும் இயற்கையும் ஒற்றுமையாக இணைந்து வாழும் ஒரு சூழலை உருவாக்குகிறது என்பது வாஸ்து நிபுணர்களின் கூற்றாக உள்ளது. வாஸ்து சாஸ்திரம் என்பது உடல் நலம், மன அமைதி, பொருளாதார வளர்ச்சி, சொத்து மதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றுக்கு வாஸ்து காரணமாக அமைகின்றது. வாஸ்து விதிகளை பின்பற்றுவது இந்து மதத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வாஸ்து சரியாக இருந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவி மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரும் என்பது நம்பிக்கை.

வாஸ்துவில் திசைகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வீட்டில் கண்ணாடிகளை நிறுவும் போது, வாஸ்துவின் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் சரியான திசையில் கண்ணாடியை வைப்பது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருவதாக நம்பப்படுகிறது.

பணத்தட்டுப்பாடும் வாஸ்துவும்…!

ஒரு நபர் நன்றாக சம்பாதித்தாலும் வந்த பணம் கையில் நிற்கவில்லை என்பதே பலரது கவலைகளாக உள்ளது. பணத் தட்டுப்பாட்டால் போராடுபவர்களுக்கு வாஸ்து தோஷத்தில் சில பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளது. 

அதை முறையாக பின்பற்றி நடக்கும் போது வாஸ்து தோஷம் நீங்கி பணம் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்பது வாஸ்து நம்பிக்கை. 

வாஸ்து சாஸ்திர விதிகளின்படி, நேர்மறை ஆற்றல் இருக்கும் இடத்தில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள் என்பது நம்பிக்கை ஆக உள்ளது.

பணம் சேர்வதற்கான வாஸ்து குறிப்புகள்:-  

  • ஆச்சார்யா முகுல் ரஸ்தோகியின் கூற்றுப்படி, உங்கள் சாப்பாட்டு மேஜை மற்றும் அலுவலக மேஜையில் ஒரு செப்பு பாத்திரத்தில் கருப்பு மிளகு வைத்திருப்பது நன்மை பயக்கும் பண வரவை அதிகரிக்கும் என நம்பப்டுகின்றது. 
  • உங்கள் வீட்டில் தூங்கும் முன் படுக்கையை நன்றாக துடைத்து சுத்தம் செய்த பின்னர் தூங்குவது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.  
  • கோவிலில் இருந்து திரும்பிய பிறகு உங்கள் கால்கள், கைகள் அல்லது முகங்களை ஒருபோதும் கழுவ வேண்டாம். 
  • பச்சை ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது புத்தி கிரகமான புதனின் ஆசியை உதவும். 
  • துவைத்த துணிகளை இரவில் மொட்டை மாடியிலோ அல்லது திறந்த பால்கனியிலோ காய வைக்காதீர்கள். அவை எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்டவை. 
  • கடனில் இருந்து விடுபட, பணத்தை வீடு அல்லது கடையின் வடக்கு திசையில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நேர்மறை ஆற்றல் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 
  • மாலை நேரத்தில் வீட்டின் பிரதான நுழைவாயிலில் நெய் தீபம் ஏற்றுவது லட்சுமி தேவிக்கு உகந்தது. 
  • வீட்டின் வடகிழக்கு மூலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த திசை லட்சுமி தேவி உரியதாகும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner