Today Pooja Time : பெண்ணு கிடைத்தாலும் புதன் கிடைக்காது.. இன்றைய நல்ல நேரம்.. வழிபாட்டு முறை மற்றும் பலன்கள் இதோ!
Today Pooja Time: ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் தொழில் போட்டிகள் நீங்கி சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம்.

Today Pooja Time: 2024 செப்டம்பர் 25 ஆம் தேதியான இன்று காலை, மாலை, நல்ல நேரம், எமகண்டம், எப்போது என்பதை பற்றி பார்ப்போம். மேலும் இன்றைய நாளில் எந்த கடவுளை வணங்குவது உங்களுக்கு நன்மை பயக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது பழமொழி. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாள் புதன் கிழமை. புதன்கிழமை வழிபாடு மிகவும் சிறப்பான பலன்களை தரும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் தொழில் போட்டிகள் நீங்கி சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம். இந்நாளுக்கு உரிய சிறப்புகள் பற்றியும் இன்றைய நாளில் பூஜைக்கு உகந்த நேரம் பற்றியும் பார்ப்போம்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 28, 2025 12:36 PMராகு கேது பலன்கள்: ராகு கேது பணக்கார யோகத்தை பெறப்போகின்ற ராசிகள் யார் தெரியுமா?.. உங்க ராசி இருக்கா?
Mar 28, 2025 07:00 AMBad Luck Rasis: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.. அஸ்தமனத்தில் சிக்கிய ராசி.. சனி உச்சம்!
Mar 28, 2025 06:35 AMஇரட்டை ராஜ யோகம்.. மீன ராசியில் சூரியன்.. அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் மூன்று ராசிகள்.. நல்ல லாபம் கிட்டும்!
Mar 28, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : சவால்களை தைரியமா எதிர் கொள்ளுங்கள்.. வெற்றி தேடி வரும்.. இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Mar 27, 2025 05:16 PMGuru: 2025-ல் பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறார் குரு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க போகுதா?
Mar 27, 2025 05:09 PMகிரகண யோகம்: 2027 வரை சனி விடமாட்டார்.. இந்த ஆண்டு முதல் யோகம் பெறுகின்ற ராசிகள்.. யார் அந்த ராசி?
இன்றைய நாள்
25 செப்டம்பர் 2024.
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு: ஸ்ரீ குரோதி:
{ குரோதி நாம சம்வத்ஸரம்}
மாதம் - புரட்டாசி
தேதி - 9
கிழமை - புதன்கிழமை
பிறை : தேய்பிறை
திதி: அஷ்டமி மாலை : 05.55 வரை
நட்க்ஷத்திரம்: திருவாதிரை அதிகாலை 4 மணி 11 நிமிடம் வரை
நல்ல நேரம்:
காலை: 09.15 முதல் 10.15 வரை
மாலை: 04.45 முதல் 05.45 வரை
கௌரி- நல்ல நேரம்:
காலை :10.45 - 11.45 வரை
மாலை : 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம்:
நண்பகல்: 12.00 முதல் 01.30 வரை
குளிகை:
காலை: 10.30 முதல் நண்பகல் 12.00 வரை
எமகண்டம்:
காலை: 07.30 முதல் 09.00 வரை
கரணம் : 6 - 7.30
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
சூரிய உதயம்:
காலை: 06.03
சந்திராஷ்டம நட்சத்திரம்: விசாகம்
இன்றைய சிறப்பு:
பொதுவாக புதன்கிழமை என்பது சாந்தி பூஜைகள் செய்வதற்கு மிகவும் உகந்த நாள். அதேபோல் அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற நாள். நந்தவனம் அமைப்பதற்கு நல்ல நாள். புதன்கிழமையில் நீங்கள் வாங்கிய கடன்களை அடைப்பதற்கு சிறந்த நாள்.
பொதுவாக புதன் கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று, புதன் பகவானுக்குரிய தானியமான பச்சை பயறு வாங்கி கொடுத்தால் பலம் அதிகரிக்கும். மேலும் புதன்கிழைமையில் மகாலட்சுமியை வழிபடுவதால் செல்வம், செழிப்பு பெருகும். குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக வழிபாடு செய்யலாம்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்ந்து ஜோதிடம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் எப்போதும் இணைந்திருங்கள்

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்